9 பேர் செல்லும் வசதியுடன் புதிய மஹிந்திரா ஸைலோ அறிமுகம்
9 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட புதிய ஸைலோ மாடலை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மாடல் டாக்சி மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
டி2 மேக்ஸ் என்ற வேரியண்ட் பெயரில் வந்திருக்கும் இந்த புதிய ஸைலோவுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என தெரிகிறது. ஏனெனில், இது அதிக இடவசதி கொண்ட 9 சீட்டர் எம்பிவி கார்களில் ஒன்றாக இருக்கும். ஸ்டைல், மேம்படுத்தப்பட்ட எவாலியா விற்பனைக்கு வந்தவுடன் இந்த புதிய வேரியண்ட்டை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இருக்கை வசதி
மூன்றாவது வரிசை இருக்கையை எடுத்துவிட்டு டாடா சுமோ, குவாலிஸ் போன்று பக்கவாட்டில் இரண்டு இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இதில், 4 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கும். மேலும், சிறந்த லெக்ரூம் மற்றும் ஹெட்ரூமையும் கொண்டிருக்கும்.

வேறுபாடு
மஹிந்திரா லோகோவுடன் கூடிய புதிய முன்பக்க கிரில், புதிய பம்பர் மற்றும் ஏர்டேம் ஆகியவை மாறியிருப்பதால், பிற ஸைலோ வேரியண்ட்டுகளிலிருந்து டி2 மேக்ஸ் வேறுபடும். தவிர, வீல் ஆர்ச்சும் இந்த புதிய வேரியண்ட்டுக்கு நல்ல தோற்றத்தை அளிக்கிறது.

எஞ்சின்
ஸைலோவில் 95 பிஎஸ் பவரையும், 220 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.5 லிட்டர் எம்டிஐ சிஆர்டிஇ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்
சிறந்த மைலேஜ் தரும் எம்பிவியாக ஸைலோ திகழ்கிறது. லிட்டருக்கு 14.95 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது.

விலை
ரூ.7.12 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் பிஎஸ்- 3 ஸைலோ டி2 மேக்ஸ் எம்பிவி கார் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








