கேமரா கண்ணில் சிக்கிய மஹிந்திராவின் புதிய மினி எஸ்யூவி!
மோகம் 30 நாள் என்றில்லாமல் மினி எஸ்யூவி கார்கள் மீதான மோகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து நிறுவனங்களுமே மினி எஸ்யூவியை அடுத்தடுத்து களமிறக்கி வருகின்றன. எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட் மஹிந்திராவும் உடனடி தீர்வாக ஸைலோ எம்பிவியின் பின்புறத்தை வெட்டிவிட்டு குவான்ட்டோவாக களமிறக்கியது.
ஆனால், டஸ்ட்டர் மற்றும் விரைவில் வர இருக்கும் ஈக்கோஸ்போர்ட்டுடன் குவான்ட்டோ போட்டி போட முடியாது என்பதை மஹிந்திரா கணித்து விட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில் எஸ்-101 என்ற குறியீட்டு பெயரில் புதிய மினி எஸ்யூவியை மஹிந்திரா வடிவமைத்து வருகிறது. இந்த புதிய மினி எஸ்யூவி தற்போது தீவிரமாக சாலை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு அருகே முழுவதும் போர்த்தப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இந்த புதிய மினி எஸ்யூவியை மோட்டார் விகடன் வாசகர் ஒருவர் படம் பிடித்துள்ளார். சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கிராஸ்ஓவர் ரக எஸ்யூவி
இந்த எஸ்யூவி கிராஸ்ஓவர் ரகத்தில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரிச்சலுகை
4 மீட்டருக்கும் குறைவான நீளத்தை கொண்டிருக்கும் என்பதால் வரிச்சலுகை கிடைக்கும்.

மாதிரி படம்
இந்த மினி எஸ்யூவி, இப்படித்தான் இருக்கலாம் என்ற யூக அடிப்படையில் ஆட்டோகார் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள படம்.

இருக்கை வசதி
இந்த எஸ்யூவி 6 பேர் பயணம் செய்யும் வசதியை கொண்டிருக்கும் என தெரிகிறது. முன் இருக்கையில் 3 பேரும், பின் இருக்கையில் 3 பேரும் அமரும் வகையில் இருக்கை வசதி இருக்கும்.

இடவசதி
பயணிகளுக்கு அதிக இடவசதி இருக்கும் வகையில், கியர் லிவர் சென்ட்ரல் கன்சோலுக்கு கீழே டேஷ்போர்டிலேயே பொருத்தப்பட்டிருக்கிறதாம்.

சிட்டி கார்
தினசரி மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் இந்த மினி எஸ்யூவி இருக்கும்.

விலை
குவான்ட்டோவை விட குறைவான விலையில் இந்த புதிய மினி எஸ்யூவியை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. அதாவது, ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் வரலாம் என தெரிகிறது. எனவே, மினி எஸ்யூவி மாடல்களுக்கு மட்டுமின்றி, ஹேட்ச்பேக் கார்களுக்கும் போட்டியை கொடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








