மஹிந்திரா மோஜோவை தூக்கில் தொங்கவிட்ட லோஹியா ஆட்டோ!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சாதக அம்சங்களை எடுத்துக் காட்டும் விதமாக மஹிந்திரா மோஜோ பைக்கை தூக்கில் தொங்குவது போன்று லோஹியா ஆட்டோ வெளியிட்டுள்ள விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

லோஹியா ஆட்டோ நிறுவனம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களை பிரபலப்படுத்தும் பணிகளை அந்த நிறுவனம் துவங்கியிருக்கிறது. தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சாதக அம்சங்களை எடுத்துக் கூறும் வகையில் புதிய விளம்பரம் ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டது.

அதில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிக சிக்கனமானவை, சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதோடு டிரைவிங் லைசென்சும் தேவையில்லை என்பன போன்ற சாதக அம்சங்கள் கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்துவதோடு, அதிக செலவு கொண்ட பெட்ரோல் பைக்குகளுக்கு பதிலாக புதிய வண்ணமயமான லோஹியா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தேர்வு செய்யுங்கள் என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. பெட்ரோல் வாகனங்களின் பாதக அம்சங்களை குறிப்பிடும் வகையில், அந்த விளம்பரத்தில் விரைவில் அறிமுகமாக இருக்கும் மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கை தூக்கில் கட்டித் தொங்கவிட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக போட்டியாளர்களை விளம்பரங்களில் குறைத்து மதிப்பிட்டு காட்டுவது வழக்கம். ஆனால், அதையெல்லாம் தாண்டி இந்த விளம்பரத்தில் மோஜோவை கொச்சைப்படுத்தியுள்ள இந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்லைடரில் விளம்பர படங்களையும், லோஹியா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் மஹிந்திரா மோஜோ படங்களை காணலாம்.

தூக்கில் கயிற்றில் மோஜோ

தூக்கில் கயிற்றில் மோஜோ

லோஹியா ஆட்டோ ஃபேஸ்புக்கில் வெளியிட்ட விளம்பரத்தில் மஹிந்திரா மோஜோ தூங்கில் தொங்குவது போன்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தூங்கில் தொங்குவது மஹிந்திரா மோஜோதானா என்ற சந்தேகம் வருகிறதா? அடுத்த படத்திற்கு வாருங்கள்.

 இப்போது உறுதியாகிவிட்டதா?

இப்போது உறுதியாகிவிட்டதா?

முந்தைய படத்தில் தூக்கில் தொங்குவது போன்று காட்டப்பட்டுள்ளது மஹிந்திரா மோஜோதான் என்பது இப்போது தெளிவாகிவிட்டதல்லவா?

இதுதான் அந்த விளம்பரம்

இதுதான் அந்த விளம்பரம்

ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய விளம்பரம் இதுதான்.

லோஹியா ஜீனியஸ்

லோஹியா ஜீனியஸ்

லோஹியா ஜீனியஸ்

லோஹியா ஜீனியஸ்

லோஹியா ஜீனியஸ்

லோஹியா ஜீனியஸ்

லோஹியா ஓமா

லோஹியா ஓமா

லோஹியா ஓமா

லோஹியா ஓமா

லோஹியா ஸ்கூட்டர்கள்

லோஹியா ஸ்கூட்டர்கள்

 மஹிந்திரா மோஜோ

மஹிந்திரா மோஜோ

அறிமுகமாவதற்கு முன்பே இப்படி ஒரு கசப்பான அனுபவத்தை சந்தித்த மஹிந்திரா மோஜோ.

மஹிந்திரா மோஜோ

மஹிந்திரா மோஜோ

மஹிந்திரா மோஜோ

மஹிந்திரா மோஜோ

More from DriveSpark

Article Published On: Saturday, February 16, 2013, 13:00 [IST]
English summary
Lohia Auto, an electric scooter company has released an ad that could lead to a controversy. The ad, shared by Lohia Auto on its Facebook page appears quite normal with three three electric scooters in the bottom and a tag line above it. What is interesting is the hanging motorcycle.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+