மஹிந்திரா குவான்ட்டோவுக்கு ரூ.44,000 வரை சலுகைகள்!
கார் விற்பனை மந்த கதியில் இருந்து வருவதையடுத்து, பல கார் நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை அறிவித்து வருகின்றன. மேலும், டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட் ஆகிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல்கள் குவான்ட்டோவுக்கு நெருக்கடியை தந்துள்ளன.
குறிப்பாக, ஈக்கோஸ்போர்ட் வருகை குவான்ட்டோவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இதை தவிர்க்கும் விதமாக குவான்ட்டோவுக்கு ரூ.44,000 வரை சேமிப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 31ந் தேதி வரை இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலுகை விபரம்
இலவச இன்ஸ்யூரன்ஸ், கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10,000, கார்ப்பரேட் சலுகையாக ரூ.6,000 வரை தள்ளுபடி உள்ளிட்டவை மூலம் ரூ.44,000 வரை சேமிப்பு சலுகைகளை குவான்ட்டோவுக்கு பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள மஹிந்திரா டீலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எஞ்சின்
குவான்ட்டோவில் எம்ஹாக் வரிசையை சேர்ந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. நகர்ப்புறம், நெடுஞ்சாலை என இரண்டிற்கும் சிறப்பாக இருந்தாலும், நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு சிறந்த எஞ்சின் என்று சொல்லலாம்.

மைலேஜ்
500 கிமீ வரை நடத்தப்பட்ட எமது டெஸ்ட் டிரைவில் ஏசி ஆன் செய்யப்பட்ட நிலையில், நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலை என ஒட்டுமொத்தமாக சேர்த்து லிட்டருக்கு 11.4 கிமீ மைலேஜ் கொடுத்தது.

உள்ளலங்காரம்
சென்ட்ரல் கன்சோலின் மேலே டிஜிட்டல் மீட்டர், காரின் வேகம், வெப்பநிலை, அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங், முன் இருக்கைகளில் ஆர்ம் ரெஸ்ட்டுகள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி, ஸ்டீயரிங் வீல் கீழே ஹெட்லைட் கன்ட்ரோல் நாப் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஆடியோ மற்றும் ஏசி
சென்ட்ரல் கன்சோலில் டிஜிட்டல் மீட்டருக்கு கீழே 2 டின் ஆடியோ சிஸ்டம், ஏசி கன்ட்ரோல் சுவிட்சுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எளிதாக இயக்கும் வகையில் இருக்கிறது. ஆனால், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இல்லை. ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பம் இருப்பதால் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

பவர் விண்டோஸ்
முன்வரிசை மற்றும் பின்வரிசைகள் பவர் விண்டோஸ் இருக்கிறது. டிரைவர் பக்கத்தில் இருக்கும் கதவில் பொதுவான கன்ட்ரோல் சுவிட்சுகளும், ஒவ்வொரு கதவிற்கும் தனித்தனியான சுவிட்சுகளும் உள்ளன.

சென்னை விலை
சென்னையில் ரூ.7.22 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








