யூஸ்டு ஆடி, பிஎம்டபிள்யூ கார் விற்பனையில் இறங்கும் மஹிந்திரா

By Saravana

ஆடி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களின் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்களை விற்பனை செய்யும் ஷோரூம்களை திறக்க இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் என்ற துணை நிறுவனத்தின் வழியாக பயன்படுத்தப்பட்ட கார்களை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் தேவையை கருதி பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் விற்பனையிலும் இறங்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 பிரத்யேக ஷோரூம்கள்

பிரத்யேக ஷோரூம்கள்

சொகுசு கார் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஹைலைன் என்ற பெயரில் பிரத்யேக ஷோரூம்களை திறக்க இருக்கிறது.

3 ஷோரூம்கள்

3 ஷோரூம்கள்

டெல்லி அருகே குர்கானில் முதல் ஷோரூமையும், இதன் தொடர்ச்சியாக மும்பை மற்றும் பெங்களூரில் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்களுக்கான ஹைலைன் ஷோரூம்களை அந்த நிறுவனம் திறக்கிறது.

விலை

விலை

புதிய சொகுசு காரின் விலையில் பாதி விலையில் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்களை விற்கப் போவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதன்மூலம், அதிக வரவேற்பு இருக்கும் என்றும் அந்த நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

அதிகாரி கருத்து

அதிகாரி கருத்து

மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் மூத்த துணைத் தலைவர் யாதின் சதா கூறுகையில்," சொகுசு கார் வாங்குவதற்காக எங்களது ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஷோரூம்களுக்கு அதிக அழைப்புகளும், விசாரணைகளும் வருகின்றன. எனவே, பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் விற்பனையையும் துவங்க உள்ளோம். ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய பல்வேறு பிராண்டுகளின் கார்களை விற்பனை செய்ய உள்ளோம். நடப்பாண்டில் 35 சதவீத வளர்ச்சியை இலக்கு வைத்துள்ளோம்," என்றார்.


More from DriveSpark

Article Published On: Friday, October 25, 2013, 11:13 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+