லேலன்ட்டை பின்னுக்குத் தள்ளி 2ம் இடத்தை பிடித்த மஹிந்திரா!

Mahindra Navistar Truck
வர்த்தக வாகன மார்க்கெட்டில் அசோக் லேலண்ட்டை பின்னுக்குத் தள்ளி 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது மஹிந்திரா.

அனைத்து ரக வாகன மார்க்கெட்டிலும் மஹிந்திராவின் கை ஓங்கி வருகிறது. கடந்த ஆண்டு கார் மார்க்கெட்டில் நீண்ட காலமாக 3ம் இடத்தில் இருந்த டாடா மோட்டார்சை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை பிடித்தது.

இதற்கடுத்து, தற்போது வர்த்தக வாகன மார்க்கெட்டிலும் மஹிந்திரா கை ஓங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த பிப்ரவரி இடையிலான காலக்கட்டத்தில் 1,67,588 வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. இதில், நேவிஸ்டார் டிரக்குகளும் அடக்கம்.

ஆனால், அசோக் லேலண்ட் நிறுவனம் 1,00,592 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதனிடையே, இன்னமும் தாங்கள்தான் நம்பர்2 இடத்தில் இருப்பதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது. மேற்கண்ட விற்பனை அறிக்கையில் தோஸ்ட் மினி டிரக் விற்பனையை சேர்க்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மாதம் வரை 30,592 தோஸ்ட் மினி டிரக்குகளை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நம்பர் ஒன் இடத்தில் டாடா மோட்டார்ஸ் உள்ளது.

ஆனாலும், கணக்கு 'டேலி' ஆகலையே...!!

More from DriveSpark

Article Published On: Wednesday, March 27, 2013, 11:39 [IST]
English summary
Mahindra have overtaken Ashok Leyland and become the second largest commercial vehicle manufacturer in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+