லிட்டருக்கு 25.89 கிமீ மைலேஜ் தந்த மஹிந்திரா குவான்ட்டோ!
பெங்களூரில் இன்று நடந்த மஹிந்திரா குவான்ட்டோ மைலேஜ் ராலியில் முதலிடத்தை பிடித்த குவான்ட்டோ கார் லிட்டருக்கு 25.89 கிமீ மைலேஜ் என்ற சாதனை அளவை பதிவு செய்தது.
மஹிந்திரா குவான்ட்டோவின் மைலேஜ் திறனை பரைசாற்றும் விதத்தில் கடந்த வாரம் ‘Boost your fuel - Quanto Weekend Mileage Rallies' என்ற பெயரில் மைலேஜ் ராலி நிகழ்ச்சி பெங்களூரில் கடந்த வாரம் முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இரண்டாவது மைலேஜ் சவால் போட்டி இன்று நடந்தது. இதில், 30 மஹிந்திரா குவான்ட்டோ உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 60 கிமீ தொலைவுக்கு இந்த மைலேஜ் சவால் போட்டி நடந்தது. மணிப்பால் கவுன்டி ரிசார்ட்டில் துவங்கி நைஸ் சாலை வழியாக திரும்பவும் மணிப்பால் கவுன்ட்டியை வந்தடையும் வகையில் போட்டி நடந்தது.
கடும் வெயிலிலும் ஏசி இல்லாமல் குவான்ட்டோவை உற்சாகத்துடன் அதிக மைலேஜை பெறுவதற்காக முழு கவனத்துடன் போட்டியாளர்கள் காரை ஓட்டினர். இன்று நடந்த மைலேஜ் சவாலின் இறுதியில் மிகவும் சாதுர்யமாக ஓட்டி வந்த பார்த்திபன் முதலிடத்தை பிடித்தார். அவரது குவான்ட்டோ லிட்டருக்கு 25.89 கிமீ மைலேஜ் என்ற சாதனை அளவை பதிவு செய்தது.
இதற்கடுத்து, முகம்மது அன்சார் 24.16 கிமீ மைலேஜை பதிவு செய்து இரண்டாம் இடத்தை பிடித்தார். லிட்டருக்கு 24.06 கிமீ மைலேஜை பதிவு செய்த சுரேந்தர் மூன்றாவது இடத்தை பிடித்தனர். முதலிடத்தை பிடித்த பார்த்திபனுக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசும், இரண்டாம் பிடித்த முகம்மது அன்சாருக்கு ரூ..5,000 ரொக்கப் பரிசும், மூன்றாவது இடத்தை பிடித்த சுரேந்தருக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.
மஹிந்திரா குவான்ட்டோவில் 1.5லிட்டர் எம்சிஆர் 100 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 100 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க்கையும் அளிக்கும். அராய் சான்றுபடி லிட்டருக்கு 17.21 கிமீ மைலேஜ் தரும் என சான்றளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








