எலக்ட்ரிக் ஃபார்முலா -1 கார் பந்தயத்தில் நுழைய மஹிந்திரா ரேவா திட்டம்

By Saravana

அடுத்த ஆண்டு துவங்க இருக்கும் எலக்ட்ரிக் ஃபார்முலா - 1 கார் பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா ரேவாவும் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தற்போது தீவிர முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ஃபார்முலா - 1 கார் பந்தயங்கள் போன்றே உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் கார் பந்தயத்தில் மஹிந்திரா ரேவா அணி சார்பில் கருண் சந்தோக் களமிறக்கப்படுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

மஹிந்திரா ஆர்வம்

மஹிந்திரா ஆர்வம்

பிராங்க்ஃபர்ட்டில் எலக்ட்ரிக் ஃபார்முலா - 1 கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பிறகு, மெக்லாரன் மற்றும் வில்லியம்ஸ் அணியின் பந்தய கார் தயாரிப்பு தொழிற்சாலைகளை மஹிந்திராவின் தொழில்நுட்ப கொள்கை துறை தலைவர் சேத்தன் மெயினி பார்வையிட்டு வந்துள்ளார்.

மஹிந்திரா தீவிர முயற்சி

மஹிந்திரா தீவிர முயற்சி

புதிய அணியை சேர்ப்பதற்கு விருப்பம் தெரிவித்து எலக்ட்ரிக் ஃபார்முலா - 1 அமைப்பின் தலைவர் அலிஜான்ரோ அகாக்குடன் மஹிந்திரா ரேவா நிறுவனம் பேசியுள்ளது.

உதிரிபாக சப்ளையர்கள்

உதிரிபாக சப்ளையர்கள்

மெக்லாரன், வில்லியம்ஸ் ஆலைகளுக்கு சேத்தன் மெயினி சென்றதில் அர்த்தம் இருக்கிறது. ஏனெனில், இரு நிறுவனங்களும் எலக்ட்ரிக் பந்தய கார்களுக்கான மின் மோட்டார்கள் மற்றும் கருவிகளை சப்ளை செய்ய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடி குறையும்

நெருக்கடி குறையும்

மெக்லாரன், வில்லியம்ஸ் மற்றும் ரெனோ அணிகள் முதலாமாண்டு எலக்ட்ரிக் பந்தய கார்களுக்கான பாகங்கள், மோட்டார்களை சப்ளை செய்ய இருப்பதால், பெரும்பாலான கார்கள் ஒரே மாதிரியாக இருக்கும் வாய்ப்புண்டு. போதிய கால அவகாசம் இல்லாததல் இந்த மூன்று நிறுவனங்களும் சப்ளை செய்யும். அடுத்து 2015ம் ஆண்டில் நடைபெற இருக்கும் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் சொந்தமாக கார்களை வடிவமைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும் முதலீடு

பெரும் முதலீடு

எலக்ட்ரிக் ஃபார்முலா - 1 பந்தயங்களில் பங்கேற்கும் அணிகள் பெரும் முதலீடுகளை செய்ய வேண்டியதிருக்கும். மேலும், ஒவ்வொரு அணியும் இரண்டு வீரர்களை அமர்த்த வேண்டும்.

கருண் சந்தோக்

கருண் சந்தோக்

மஹிந்திரா ரேவா அணி சார்பில் இரண்டு வீரர்களில் ஒருவராக கருண் சந்தோக் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக, பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஒரு போட்டிக்கு 2 கார்கள்

ஒரு போட்டிக்கு 2 கார்கள்

பெட்ரோல் கார்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் கார்கள் பயன்படுத்தப்படும். ஒரு பந்தயத்திற்கு ஒரு அணி தலா 2 கார்களை பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

கால அட்டவணை

கால அட்டவணை

பேங்காக், பீஜிங், பியூனாஸ் ஏர்ஸ், லண்டன், ரோம், லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, புட்ரஜெயா, ரியோ டி ஜெனீரோ மற்றும் பெர்லின் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் போட்டிகள் துவங்குகின்றன. மொத்தம் 10 நாடுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, October 3, 2013, 12:23 [IST]
English summary
Formula E is an international single seater racing championship that is scheduled to debut in September 2014. It will be held on the same lines as Formula 1 Grand Prix, with gasoline engine racers replaced with pure electric racers. Also, unlike Formula 1, all Formula E races will be held in street circuits.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+