கேமரா கண்களில் சிக்கிய மஹிந்திராவின் முதல் சொகுசு பஸ்
புனே அருகே மஹிந்திராவின் முதல் ஆம்னி பஸ் ரகசிய சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட இந்த புதிய சொகுசு பஸ் விரைவில் அறிமுகம் செய்யபப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த புதிய பஸ் வால்வோ, பென்ஸ், டாடா, அசோக் லேலண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் சொகுசு பஸ்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும். ஸ்பை ஷாட் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தயாரிப்பு
புனேயிலுள்ள மஹிந்திராவின் டிரக் மற்றும் பஸ் தயாரிப்பு தொழிற்சாலையில்தான் இந்த புதிய ஆம்னி பஸ்சும் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலைக்கு அருகில் செல்லும் நெடுஞ்சாலையில் வைத்து இந்த பஸ் சோதனை செய்யப்பட்டுள்ளது.

ரியர் எஞ்சின்
பின்புற எஞ்சின் கொண்ட பஸ் மாடலாக இருக்கும். இதில் நேவிஸ்டாரின் 7.2 லிட்டர்எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 202 எச்பி ஆற்றலையும், 880 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் திறன் கொண்டதாக இந்த எஞ்சின் குறிப்பிடப்படுகிறது.

இருக்கை வசதி
இந்த ஆம்னி பஸ் 40 பயணிகள் அமர்ந்து செல்லும் வசதி கொண்டதாக இருக்கும். ஏசி, சொகுசான இருக்கைகளுடன் போட்டியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும்.

விலை
வெளிநாட்டு நிறுவனங்களான வால்வோ, பென்ஸ் நிறுவனங்களின் பஸ்களின் விலையைவிட இது குறைவாக இருக்கும்.

மஹிந்திரா பஸ் மாடல்கள்
மஹிந்திரா நிறுவனம் டூரிஸ்டர் வரிசையில் 4 பஸ் மாடல்களை விற்பனை செய்கிறது. 16,25,32 மற்றும் 40 பேர் பயணிக்கும் வசதி கொண்டதாக இந்த பஸ்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தனது முதல் ஆம்னி பஸ்சை மஹிந்திரா சோதனை நடத்தியிருப்பது ஆவலை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








