மஹிந்திராவின் புதிய மினி எக்ஸ்யூவி 500 பற்றிய புதிய தகவல்கள்

ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டை உடைக்கும் வகையிலான புதிய மினி எஸ்யூவியை மஹிந்திரா சோதனை நடத்தி வருவதை சமீபத்தில் தெரிவித்திருந்தோம். இந்த புதிய மினி எஸ்யூவியின் கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

குறைந்த விலையில், அதிக இருக்கை வசதிகள் கொண்டதாக வர இரு்ககும் இந்த புதிய மினி எஸ்யூவி நிச்சயம் மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஸ்லைடரில் கூடுதல் தகவல்களை காணலாம்.

மாதிரி படம்

மாதிரி படம்

எஸ்-101 என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்ட இந்த மினி எஸ்யூவி, இப்படித்தான் இருக்கலாம் என்ற யூக அடிப்படையிலான மாதிரி படத்தை ஆட்டோகார் இந்தியா இதழ் வெளியிட்டுள்ளது.

 மினி எக்ஸ்யூவி 500

மினி எக்ஸ்யூவி 500

எக்ஸ்யூவி 500 காரின் அடிப்படையில் இந்த புதிய மினி எஸ்யூவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த புதிய மினி எஸ்யூவி இரண்டு இருக்கை வரிசை கொண்டதாக இருக்கும். முன் இருக்கையில் டிரைவர் உட்பட 3 பேரும், பின் இருக்கையில் 3 பேரும் மொத்தம் 6 சீட்டர் காராக இருக்கும்.

கூடுதல் இருக்கை

கூடுதல் இருக்கை

குவான்ட்டோ போன்றே பின்புறத்தில் 2 சிறியவர்கள் அமர்ந்து செல்வதற்கான மடக்கி விரிக்கும் வசதி கொண்ட இருக்கைகளும் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடவசதி

இடவசதி

முன் இருக்கையில் அமரும் பயணிகளுக்கு அதிக இடவசதி இருக்கும் வகையில், கியர் லிவர் டேஷ்போர்டிலேயே பொருத்தப்பட்டிருக்கிறதாம்.

கிராஸ்ஓவர்

கிராஸ்ஓவர்

நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் கிராஸ்ஓவர் ரகத்தில் இந்த புதிய மினி எஸ்யூவியை மஹிந்திரா வடிவமைத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

விலை

விலை

ரூ.5 லட்சம் விலையில் இந்த புதிய மினி எஸ்யூவி விற்பனை கொண்டு வரப்பட உள்ளதாக மஹிந்திரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குவான்ட்டோவைவிட விலை குறைவாக இருக்குமாம்.

Rendered Image source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Monday, April 8, 2013, 14:38 [IST]
English summary
Country's leading utility vehicle maker is now working on a new compact SUV, which will sit below the recently launched Quanto. Codenamed as Mahindra S101, the new compact SUV is rumoured to be priced as low as Rs 5 lakh, making it the most affordable SUV in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+