முதல்முறையாக புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் வரும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

By Saravana

ஹைபிரிட் நுட்பத்தில் முதல்முறையாக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கார்ப்பியோ எஸ்யூவி மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கிறது.

முழுமையான ஹைபிரிட் எஸ்யூவியாக வர இருக்கும் புதிய ஸ்கார்ப்பியோவில் இடம்பெற இருக்கும் அந்த புரட்சிகரமான தொழில்நுட்பம் மற்றும் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 மைக்ரோ ஹைபிரிட்

மைக்ரோ ஹைபிரிட்

ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 500 ஆகிய எஸ்யூவி மாடல்களில் தற்போது மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டத்துடன் விற்பனையாகிறது. கார் குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் நிற்கும்போது ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் மூலம் எஞ்சினை அணைத்து எரிபொருள் சிக்கனத்தை தரும் தொழில்நுட்பம் இது. இதன்மூலம், 5 சதவீத கூடுதல் எரிபொருள் சேமிப்பை பெற முடியும்.

கூடுதல் மைலேஜ்

கூடுதல் மைலேஜ்

இந்த புதிய ஹைபிரிட் தொழில்நுட்பம் மூலம் 20 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

ஹைபிரிட் ஸ்கார்ப்பியோ

ஹைபிரிட் ஸ்கார்ப்பியோ

ஸ்கார்ப்பியோவில் தற்போது முழுமையான ஹைபிரிட் தொழில்நுட்பம் புகுத்தப்பட உள்ளது. டொயோட்டா பிரையஸ் உள்ளிட்ட கார்கள் போன்ற தொழில்நுட்பமாக இருக்கும்.

 புரட்சிகர நுட்பம்

புரட்சிகர நுட்பம்

சர்வதேச அளவில் தற்போது ஹைபிரிட் கார்களில் ஆட்டோமேட்டிக் அல்லது செமி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாகவே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், உலகிலேயே முதல்முறையாக மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட காரில் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது.

சப்ளையர்கள்

சப்ளையர்கள்

இந்த புதிய ஹைபிரிட் மாடல் தயாரிப்புக்காக சர்வதேச அளவில் பிரபல ஆட்டோமொபைல் சப்ளையர்களான இசட்எஃப் டிரான்ஸ்மிஷன் தயாரிப்பு நிறுவனம், கான்டினென்டல் டயர் நிறுவனம் மற்றும் லித்தியம் அயான் பேட்டரி சப்ளையை பெறுவதற்காக சாம்சங் எஸ்டிஐ உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் மஹிந்திரா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.

 கணக்கு

கணக்கு

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. இதை மனதில் வைத்து புதிய ஹைபிரிட் எஸ்யூவியை உருவாக்கும் முயற்சியில் மஹிந்திரா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அறிமுகம்

அறிமுகம்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹைபிரிட் ஸ்கார்ப்பியோவை மஹிந்திரா அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, புதிய எலக்ட்ரிக் கார் மாடல்களையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.


More from DriveSpark

Article Published On: Friday, December 6, 2013, 13:19 [IST]
English summary
Mahindra, owners of one of the world's least expensive electric four seater, the e2o, is working on bringing out full fledged hybrid SUVs, a report on ET claims. In fact, Mahindra is said to be readying hybrid versions of its existing SUVs for the Indian Auto Show, which is in early Feb 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+