ஆட்டோமேட்டிக் ஸ்கார்ப்பியோவுக்கு மீண்டும் புக்கிங் துவக்கம்

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஸ்கார்ப்பியோ காருக்கான முன்பதிவு மீண்டும் துவங்கப்பட்டுள்ளதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் ஸ்கார்ப்பியோ கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிஎஸ்ஐ நிறுவனத்திடம் இருந்து ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை மஹிந்திரா பெற்று வந்தது.

Mahindra Scorpio

இந்தநிலையில், டிஎஸ்ஐ நிறுவனத்தை சீனாவை சேர்ந்த கீலி நிறுவனம் கையகப்படுதத்தியதால் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பெறுவதில் சிக்கல் எழுந்தது.

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் ஆட்டோமேட்டிக் ஸ்கார்ப்பியோ கார் விற்பனையை மஹிந்திரா நிறுத்தியது. இந்த நிலையில், தற்போது பாஷ் நிறுவனத்திடமிருந்து ஸ்கார்ப்பியோ காருக்கான 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை பெறுவதற்கு மஹிந்திரா ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையடுத்து, தற்போது ஆட்டோமேட்டிக் ஸ்கார்ப்பியோ காருக்கான முன்பதிவும் டீலர்களில் துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் ஆட்டோமேட்டிக் மாடல் கிடைக்கும்.

120 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தம் எம்ஹாக் எஞ்சினுடன் வரும் ஸ்கார்ப்பியோ சிறந்த ஆட்டோமேட்டிக் எஸ்யூவியாக திகழ்கிறது. குரூஸ் கன்ட்ரோல், ஏபிஎஸ், இபிடி, ஏர்பேக்ஸ், டயர் பிரஷர் மானிட்டர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ரெயில் சென்சிங் வைப்பர், வாய்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், 2 டின் ஆடியோ சிஸ்டம் என ஏராளமான வசதிகளுடன் ஸ்கார்ப்பியோ கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 14, 2013, 13:23 [IST]
English summary
Mahindra dealers across India taking bookings for the automatic gearbox equipped Scorpio SUV, sources said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+