ஒரு வழியாக டஸ்ட்டரை பின்னுக்குத் தள்ளி காலரை உயர்த்திய ஸ்கார்ப்பியோ!

By Saravana

எஸ்யூவி மார்க்கெட் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக, டஸ்ட்டர், ஸ்கார்ப்பியோ இடையில் கட்டிப் புரளாத குறையாக விற்பனையில் போட்டா போட்டி நடந்து வருகிறது.

றெக்கை கட்டி பறந்து வந்த ஸ்கார்ப்பியோ விற்பனையை டஸ்ட்டர் வந்து அடக்கியது. ஸ்கார்ப்பியோ மீண்டும் பழையபடி எழுந்து பீடு நடை போடுமா என்ற சந்தேகம் பரவலாக எழுந்தது.

Mahindra Scorpio

இந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக ஸ்கார்ப்பியோ விற்பனை டஸ்ட்டரை மெல்ல விஞ்சியுள்ளது. தனது பரம வைரியான டஸ்ட்டரையும் ஒரு வழியாக கீழே தள்ளி காலரை தூக்கி விட்டுள்ளது.

ஈக்கோஸ்போர்ட் வருகை ஒருபக்கம் டஸ்ட்டரை கதற வைத்துள்ள நிலையில், ஸ்கார்ப்பியோவிடமும் தோற்றுப் போயுள்ளது. கடந்த ஜூலையில் டஸ்ட்டரை ஸ்கார்ப்பியோ பின்னுக்குத் தள்ளிய நிலையில், கடந்த மாதமும் ஸ்கார்ப்பியோ கையே ஓங்கி இருந்தது.

கடந்த மாதம் 2,967 டஸ்ட்டர் எஸ்யூவிகள் விற்பனையான நிலையில், 3,356 ஸ்கார்ப்பியோ கார்கள் விற்பனையாகியுள்ளன. இது டஸ்ட்டர் மார்க்கெட்டில் பெரிய அடி விழுந்துள்ளதை காட்டுகிறது.

இருப்பினும், நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரையிலான விற்பனையில் டஸ்ட்டரே முன்னிலை வகிக்கிறது. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் 36,545 டஸ்ட்டர் எஸ்யூவிகளும், 32,867 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளும் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஈக்கோஸ்போர்ட்டுக்கான முன்பதிவும் நாலுகால் பாய்ச்சலில் இருந்து வருகிறது. இது டஸ்ட்டரை நம்பி பிழைப்பு நடத்தி வரும் ரெனோவுக்கு வயிற்றில் புளியை கரைத்து வருகிறது. தற்போது டஸ்ட்டரை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதில் அந்த நிறுவனம் படு தீவிரமாக இறங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 6, 2013, 9:49 [IST]
English summary
Mahindra has sold over 3,356 units in August of 2013 against 2,967 units of Duster. In July, Scorpio outsold Duster by over 150 units with sales of 3,256 units versus Duster's 3,089 units. For the period January-July 2013, Renault's Duster sales aggregated to 36,545 units against Scorpio's 32,867 units. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+