விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டிய ஸ்கார்ப்பியோ... சாதிக்க காரணங்கள்
யுட்டிலிட்டி கார் தயாரிப்பில் பிரபலமாக திகழ்ந்தாலும் ஸ்கார்ப்பியோ மூலம்தான் மஹிந்திரா பிராண்டுக்கு புதிய அங்கீகாரம் கிடைத்தது. அரசியல்வாதிகள் முதல் சினிமாக்காரர்கள் வரை கைக்குள் வைத்திருந்த டாடா சஃபாரியை ஒரே மூச்சில் ஊதித் தள்ளி அந்த இடத்தை வெகு சுலபத்தில் பிடித்துக் கொண்டது ஸ்கார்ப்பியோ.
நம் நாட்டு கார் மார்க்கெட் கடந்த 10 ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்து புதிய அத்தியாயத்தில் பீடு நடை போடும் நிலையில், கடந்த 2002ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்ப்பியோ இன்று வரை தனக்கென தனி சாம்ராஜ்யத்தையும், மதிப்பையும் தக்க வைத்து வருகிறது.
இந்த நிலையில், உள்நாட்டில் ஸ்கார்ப்பியோவின் விற்பனை 4 லட்சம் என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளது. விற்பனையில் பல புதிய மைல்கல்லை கடந்து வரும் ஸ்கார்ப்பியோவின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்
முறுக்கும், கம்பீரமும் நிறைந்த தோற்றம்தான் பல வாடிக்கையாளர்களை ஸ்கார்ப்பியோ க்ளீன் போல்டாக்கியதற்கு முக்கிய காரணம்.

மாடல்கள்
2002ம் ஆண்டில் ஸ்கார்ப்பியோ மார்க்கெட்டுக்கு வந்தது. 2006ம் ஆண்டில் ஸ்கார்ப்பியோவின் மேம்படுத்தப்பட்ட மாடலும், 2007ல் பிக்கப் டிரக் மாடலும், 2008ல் ஆட்டோமேட்டிக் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டன.

எஞ்சின்
ஸ்கார்ப்பியோவில் 120 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 75 பிஎச்பி 2.2 லிட்டர், 115 பிஎச்பி 2.6 லி டீசல் எஞ்சின் மாடல்களிலும் வருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களில் கிடைக்கிறது.

மைலேஜ்
பவர்ஃபுல் எஸ்யூவியாக இருக்கும் அதே சமயத்தில் அதிக மைலேஜ் தரும் வாகனமாகவும் இருப்பதும் வாடிக்கையாளர்களை கவர காரணம். மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் நகர்ப்புற டிரைவிங்கில் 10.5 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலை டிரைவிங்கில் 15.4 கிமீ மைலேஜையும் ஆட்டோமேட்டிக் மாடல் நகர்ப்புறத்தில் 9.6 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் 13 கிமீ மைலேஜையும் தருவதாக மஹிந்திரா தெரிவிக்கிறது.

இடவசதி
முதல் வரிசை இருக்கைகளில் மிக தாரளமான இடவசதி கிடைக்கிறது. அதேவேளை, இரண்டாவது வரிசை இருக்கையில் லெக்ரூம் குறைவாக இருப்பது ஸ்கார்ப்பியோவின் சிறிய மைனஸ். மொத்தம் 16 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

அலாய் வீல்
காரின் தோற்றத்திற்கு அழகு தரும் வகையிலான 16 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

வசதிகள்
கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, 2 டின் ஆடியோ சிஸ்டம், சன் வைசர், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் ரியர் வியூ மிரர் ஆகிய வசதிகள் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ், சிறப்பான ஹெட்லைட் ஆகிய பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது. 2009ல் இந்த பாதுகாப்பு வசதிகள் ஸ்கார்ப்பியோவில் சேர்க்கப்பட்டன.

மல்லு கட்டும் ஸ்கார்ப்பியோ
மார்க்கெட்டுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிய நிலையில் டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட் வரவால் ஸ்கார்ப்பியோ மார்க்கெட்டில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் சளைக்காமல் நின்று இன்றும் மாதத்திற்கு சராசரியாக 3,000க்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கையை ஸ்கார்ப்பியோ பதிவு செய்து வருகிறது.

2014 மாடல்
ஸ்கார்ப்பியோவின் விற்பனையை தக்க வைக்கும் பொருட்டு கூடுதல் அம்சங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மாடலை மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்த மேம்படுத்தப்பட்ட ஸ்கார்ப்பியோ விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகப்பில் அதிக மாற்றங்களையும், பின்புறத்தில் சிறிய மாற்றங்களுடன் வருகிறது. இரண்டாவது வரிசை இருக்கையில் அதிக லெக்ரூம் வசதி கொண்டதாகவும் இருக்குமாம். டபிள்யூ 105 என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய ஸ்கார்ப்பியோ தற்போது சாலை சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








