கூடுதல் அம்சங்களுடன் ஸ்பெஷல் எடிசன் ஸ்கார்ப்பியோ அறிமுகம்
கூடுதல் அம்சங்களுடன் லிமிடேட் எடிசன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தையொட்டி சிறப்பு பதிப்பாக குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட உள்ளது.
வெளித்தோற்றம் மற்றும் உட்புறத்தில் பல்வேறு மாற்றங்கள், கூடுதல் வசதிகளுடன், ஏராளமான நிரந்தர பாதுகாப்பு வசதிகளுடன் வந்துள்ளது ஸ்பெஷல் ஸ்கார்ப்பியோ. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
வெளிப்புற மாற்றங்கள் பனி விளக்குகளுக்கு மேலே டீகெல்ஸ் ஸ்டிக்கர் மற்றும் கருப்பு நிற ஸ்கஃப் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது. குரோம் பூச்சுடன் கூடிய அலாய் வீல்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. பின்புறம் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளது.

டிவிடி பிளேயர்
உட்புற அம்சங்கள் உள்பக்க கூரையில் 9 இஞ்ச் திரையுடன் கூடிய டிவிடி பிளேயர் பொருத்தப்பட்டுள்ளது.

இன்டிரியர்
அலங்காரங்கள் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் பொறிக்கப்பட்ட லெதர் இருக்கைகள், லெதர் உறை போடப்பட்ட ஸ்டீயரிங் வீல், பீயேஜ் வண்ண இன்டிரியர், மரவேலைப்பாடு செய்யப்பட்ட சென்ட்ரல் கன்சோல் ஆகியவை கூடுதல் அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வசதிகள்
ஏபிஎஸ், டியூவல் ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஆட்டோமேட்டிக் ரெயின் சென்சிங் சென்சார், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், டயர் பிரஷர் மானிட்டர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளன.

மொத்த கார்கள்
லிமிடேட் மாடல் 2010ம் ஆண்டு ஸ்பெஷல் எடிசன் மாடலில் மொத்தம் 1,000 ஸ்கார்ப்பியோக்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 500 ஸ்பெஷல் ஸ்கார்ப்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.

எஞ்சின்
120 பிஎச்பி சக்தியையும், 290 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்புரியும்.

விலை
ரூ.11.88 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஸ்பெஷல் எடிசன் ஸ்கார்ப்பியோ விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








