விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய எக்ஸ்யூவி 500!
அறிமுகம் செய்யப்பட்டு 16 மாதங்களில் இதுவரை 50,000 மஹிந்திரா எக்ஸ்யூவி கார்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. கடந்த 2011ல் மார்க்கெட்டுக்கு வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றது.
அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை எக்ஸ்யூவிக்கான முன்பதிவு எண்ணிக்கையும், காத்திருப்பு காலமும் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது. பல கட்டங்களாக எக்ஸ்யூவிக்கு முன்பதிவுகளை செய்து டெலிவிரி கொடுத்து வருகிறது மஹிந்திரா. மேலும், குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களை தேர்வு செய்து டெலிவிரி கொடுத்தது.
இந்த நிலையில், எக்ஸ்யூவி விற்பனை 16 மாதங்களில் 50,000 கடந்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. எஸ்யூவி மார்க்கெட்டில் இது பெரும் சாதனை அளவாகவே பார்க்கப்படுகிறது.2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி கிடைக்கிறது.
எக்ஸ்யூவியில் 2179 சிசி திறன் கொண்ட எம்ஹாக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 140 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஸ்டைலான டிசைன், ஏராளமான வசதிகளுடன் கிடைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி ரூ.11.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

மஹிந்திரா எக்ஸ்யூவி 500



Click it and Unblock the Notifications








