'ஸ்பெஷல்' மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அறிமுகம்: ஆன்லைனில் முன்பதிவு
கூடுதல் அம்சங்களுடன் லிமிடேட் எடிசன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், இப்போது சிறப்பம்சங்கள் தகவலை அதே பக்கத்தில் மஹிந்திரா வெளியிட்டுள்ளது.
பண்டிகை காலத்தையொட்டி சிறப்பு பதிப்பாக குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட உள்ளது. முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதுடன், விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

வெளிப்புற மாற்றங்கள்
பனி விளக்குகளுக்கு மேலே டீகெல்ஸ் ஸ்டிக்கர் மற்றும் கருப்பு நிற ஸ்கஃப் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது. குரோம் பூச்சுடன் கூடிய அலாய் வீல்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. பின்புறம் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளது.

உட்புற அம்சங்கள்
உள்பக்க கூரையில் 9 இஞ்ச் திரையுடன் கூடிய டிவிடி பிளேயர் பொருத்தப்பட்டுள்ளது. டியூவல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கும்.

அலங்காரங்கள்
ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் பொறிக்கப்பட்ட லெதர் இருக்கைகள், லெதர் உறை போடப்பட்ட ஸ்டீயரிங் வீல், பீயேஜ் வண்ண இன்டிரியர், மரவேலைப்பாடு செய்யப்பட்ட சென்ட்ரல் கன்சோல் ஆகியவை கூடுதல் அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

லிமிடேட் மாடல்
2010ம் ஆண்டு ஸ்பெஷல் எடிசன் மாடலில் மொத்தம் 1,000 ஸ்கார்ப்பியோக்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 500 ஸ்பெஷல் ஸ்கார்ப்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.

எஞ்சின்
120 பிஎச்பி சக்தியையும், 290 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்புரியும்.


Click it and Unblock the Notifications








