விரைவில் அறிமுகமாகிறது மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அறிமுகம் செய்யப்பட உள்ளது.
விற்பனையில் மஹிந்திராவுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது ஸ்கார்ப்பியோ. டஸ்ட்டர் உள்ளிட்ட புதிய மாடல்கள் வரவால் ஸ்கார்ப்பியோவுக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனை போக்கிக்கொள்ளும் விதமாக ஸ்கார்ப்பியோவில் மஹிந்திரா பல மாற்றங்களை செய்துள்ளது. இந்த புதிய மாடல் தற்போது தீவிர சோதனையில் இருந்து வருகிறது.
முன்பக்க கிரில், பம்பர், ஹெட்லைட் ஆகியவற்றிலும், பின்புறம் டெயில் லைட், பம்பர் ஆகியவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. தற்போதைய மாடலைவிட கூடுதல் வசீகரம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் டேஷ்போர்டை ஒத்ததாக இன்டிரியர் இருக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், புதிய ஸ்கார்ப்பியோ எஸ்யூவி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் இந்த மேம்படுத்தப்பட்ட ஸ்கார்ப்பியோ மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








