மஹிந்திரா வெரிட்டோவுக்கு கார்மின் நேவிகேஷன் சிஸ்டம்!

By Saravana

வெரிட்டோ காரின் டாப் வேரியண்ட் இனி கார்மின் நேவிகேஷன் சிஸ்டத்துடன் கிடைக்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

தனது கார்களில் புதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதில் மஹிந்திரா முன்னிலை வகிக்கிறது. ஏராளமான புதிய வசதிகளை வழங்கி வரும் மஹிந்திரா தற்போது வெரிட்டோ காருக்கு கூடுதல் மதிப்பு சேர்த்திருக்கிறது.

உலகின் மிகப்பிரபலமான கார்மின் நேவிகேஷன் சிஸ்டத்தை வெரிட்டோ காருடன் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் நூவி 40எல்எம் மற்றும் நூவி 50 எல்எம் ஆகிய இரண்டு மாடல்களை கார்மின் விற்பனை செய்து வருகிறது.

Garmin Navigation System

இதில், 4.3 இஞ்ச் திரை கொண்ட 40 எல்எம் நேவிகேஷன் சிஸ்டம் ரூ.8,450 விலையிலும், 5.0 இஞ்ச் திரை ரூ.9990 விலையிலும் கிடைக்கிறது. இந்த நேவிகேஷன் சிஸ்டம்களில் ஆயுட்கால வரைபட வசதியை பெறலாம்.

இதுதவிர, தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்பட 11 மொழிகளில் வாய்மொழி உத்தரவை வழங்கும். நாட்டின் 4214 நகரங்களின் வரைபடங்களை தெருவாரியாக தெரிந்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. இதுதவிர, ஏராளமான வசதிகளை இந்த கார்மின் நேவிகேஷன் சிஸ்டம் மூலம் பெறலாம்.

வெரிட்டோ எக்ஸ்கியூட்டிவ் எடிசன் டாப் வேரியண்ட் காருடன் இந்த நேவிகேஷன் சிஸ்டத்தை பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 19, 2013, 10:40 [IST]
English summary
Mahindra Verito's top end Executive edition variant will come with Garmin's navigation hardware installed in them. Garmin, the world's leading automobile sat nav hardware manufacturer, had earlier said that it would be make its Personal Navigation Devices (PND) available as part of Maruti Genuine Accessories (MGA). Garmin's Nuvi 40LM sat nav system will be provided with Verito Executive Edition.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+