சென்னையில் மஹிந்திரா வைப் விலை விபரம்

தேசிய அளவிலான அறிமுகத்தை தொடர்ந்து தற்போது மாநிலங்கள் அளவில் வைப் காரை மஹிந்திரா விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.
டெல்லி, சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களில் நேற்று வைப் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னையில் நடந்த விழாவில் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் அருண் மல்ஹோத்ரா வைப் காரை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர்," சொகுசு, இடவசதிமிக்கதாக மஹிந்திரா வைப் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். உயர்ரக கார்களில் இருப்பது போன்று பின்புறம் எல்இடி விளக்குகளுடன் கூடிய பிரேக் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இது அதிக பாதுகாப்பை வழங்கும்," என்று வைப் பற்றிய முக்கிய அம்சங்களை எடுத்துக் கூறினார்.
சென்னையில் எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
வெரிட்டோ வைப் டி2: ரூ.5.72 லட்சம்
வெரிட்டோ வைப் டி4: ரூ.5.99 லட்சம்
வெரிட்டோ வைப் டி6: ரூ.6.60 லட்சம்


Click it and Unblock the Notifications








