எக்ஸ்யூவி 500 பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது மஹிந்திரா?

By Saravana

மஹிந்திரா எக்ஸ்யூவியில் இருந்த தொழில்நுட்ப பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி வந்தபோது கிடைத்த எகிடுதகிடான வரவேற்பும், அதன்பின்னர் எழுந்த பிரச்னைகளால் அந்த காருக்கான மவுசு மங்கியதும் நாடறிந்த விஷயம்.

மேலும், டஸ்ட்டர் மற்றும் சமீபத்திய ஈக்கோஸ்போர்ட் நெருக்கடியால் மஹிந்திரா எக்ஸ்யூவி மீதான ஈர்ப்பு குறைந்துபோனது. இந்த நிலையில், போட்டியாளர்களின் நெருக்கடிகளையும், வாடிக்கையாளர்களின் மனக் கசப்பை போக்கிக் கொள்ளும் விதமாக எக்ஸ்யூவியின் தொழில்நுட்ப பிரச்னைகளை மஹிந்திரா சரி செய்துள்ளது.

ஃபிட் அன்ட் ஃபினிஷ்

ஃபிட் அன்ட் ஃபினிஷ்

மஹிந்திரா யுட்டிலிட்டி வாகனங்களில் ஃபிட் அன்ட் ஃபினிஷ் சிறப்பாக இல்லை என்ற குறை இருந்து வருகிறது. இந்த அவப்பெயரை போக்கும் விதத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500வின் ஃபிட் அன்ட் ஃபினிஷ் சிறப்பாக இருக்கும் வகையில் புதிய உற்பத்தி முறைகளை கையாள்வதாக மஹிந்திரா வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

 டச்ஸ்கிரீன் சிஸ்டம்

டச்ஸ்கிரீன் சிஸ்டம்

டச்ஸ்கீரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திலும் பல பிரச்னைகள் எழுவதாக வந்த புகார்களையடுத்து, அந்த பிரச்னைகளையும் மஹிந்திரா சரி செய்துள்ளது.

பிரேக் பிரச்னை

பிரேக் பிரச்னை

எக்ஸ்யூவியின் மிக முக்கிய பிரச்னையாக குறிப்பிடப்படுவது பிரேக் சரியாக செயல்படவில்லை என்பதுதான். பிரேக் பேடுகளிலிருந்து அதிக சப்தம் வருகிறது என்பதும் வாடிக்கையாளர்களின் முன்வைத்த கூடுதல் புகார். இதையடுத்து, புதிய பிரேக் பேடுகள் பொருத்தப்பட்டிருப்பதுடன், பிரச்னைகள் களையப்பட்ட பிரேக் பூஸ்டர் மற்றும் ஏபிஎஸ் துணையுடன் இயங்கும் வகையில் இதனை முற்றிலுமாக சரிசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிளட்ச் பிரச்னை

கிளட்ச் பிரச்னை

கிளட்ச்சின் இயக்கமும் சிறப்பாக இருக்கும் வகையில் புதிய சீல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். இதனால், கிளட்ச் பெர்ஃபார்மென்ஸ் முன்பைவிட சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷனில் புதிய புஷ்கள் பொருத்தப்பட்டிருப்பதால், கூடுதல் சொகுசான பயண அனுபவத்தை வழங்குமாம்.

சேஸீ பிரச்னை

சேஸீ பிரச்னை

மோனோகாக் சேஸீயில் இருந்த வெல்டிங் பிரச்னைகளையும் மஹிந்திரா சரி செய்துள்ளதாம்.

உற்பத்தி

உற்பத்தி

பிரச்னைகள் சரிசெய்யப்பட்ட எக்ஸ்யூவி 500 காரின் உற்பத்தி சகன் ஆலையில் தற்போது துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, August 22, 2013, 13:43 [IST]
English summary
Country's largest utility maker Mahindra has upgraded its flagship model XUV500 crossover.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+