குறைந்த விலை மஹிந்திரா எக்ஸ்யூவியின் விலை எவ்வளவு?

குறைந்த விலை மஹிந்திரா எக்ஸ்யூவி மாடலின் விலை ரூ.10.99 லட்சமாக நிர்ணயிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி 500வின் விற்பனை மந்தமடைந்துள்ளது.

ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற எஸ்யூவி மாடல்கள் வரவு எக்ஸ்யூவியின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. இந்த நிலையில், எக்ஸ்யூவி விற்பனையை அதிகரிக்கும் வகையில் குறைந்த விலை மாடலை மஹிந்திரா விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

புதிய வேரியண்ட்

புதிய வேரியண்ட்

டபிள்யூ6 மற்றும் டபிள்யூ8 ஆகிய வேரியண்ட்டுகளில் தற்போது விற்பனை செய்யப்படும் நிலையில், டபிள்யூ4 என்ற புதிய வேரியண்ட்டை குறைந்த விலை வேரியண்ட்டாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வசதிகள் குறைவு

வசதிகள் குறைவு

இந்த புதிய வேரியண்ட்டில் பல வசதிகளை பிடுங்கிவிட்டு விற்பனைக்கு கொண்டு வருகிறது மஹிந்திரா. இருப்பினும், எஞ்சின் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும்.

விலை எவ்வளவு குறையும்?

விலை எவ்வளவு குறையும்?

குறைந்த விலை டபிள்யூ 4 வேரியண்ட் ரூ.10.99 லட்சத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, தற்போதைய குறைந்த விலை வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும் டபிள்யூ 6 வேரியண்ட்டைவிட ரூ.87,000 முதல் ஒரு லட்சம் வரை குறைவாக இருக்கும் என தெரிகிறது.

 போட்டி

போட்டி

டாடா சஃபாரி, ரெனோ டஸ்ட்டர், நிசான் டெரானோ மற்றும் மஹிந்திராவின் மற்றொரு எஸ்யூவி மாடலான ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக இந்த புதிய மாடல் வர இருக்கிறது.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த வாரத்திற்குள் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 23, 2013, 17:29 [IST]
English summary
According to the reports, Mahindra XUV500 in W4 trim would be priced at 10.99 lakh rupees, ex-showroom Delhi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+