எக்ஸ்யூவி 500வின் குறைந்த விலை வேரியண்ட்: விபரங்கள் கசிந்தன

குறைந்த விலை மஹிந்திரா எக்ஸ்யூவி 500வில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி தற்போது டபிள்யூ6 மற்றும் டபிள்யூ8 ஆகிய இரு வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்களால் எக்ஸ்யூவி 500 விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, . டபிள்யூ4 என்ற புதிய விலை குறைப்பு மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மஹிந்திரா. விலை குறைப்புக்காக வசதிகள் குறைக்கப்பட்டாலும், பாதுகாப்பு அம்சங்களில் அதிகமாக கைவைக்காமல் மஹிந்திரா இந்த புதிய வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வர இருப்பது ஆவலை அதிகரித்துள்ளது.

எக்ஸ்யூவி 500 Vs டஸ்ட்டர் டீசல் டாப் வேரியண்ட் ஒப்பீடு

 புதிய வேரியண்ட்

புதிய வேரியண்ட்

புதிய டபிள்யூ4 வேரியண்ட்டில் மிக சாதுர்யமாக வசதிகளை கொடுத்தும், நீக்கியும் உள்ளது மஹிந்திரா. டபிள்யூ6 வேரியண்ட்டைவிட இந்த வேரியண்ட் ரூ.1.5 லட்சம் குறைவான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 நீக்கப்பட்ட வசதிகள்

நீக்கப்பட்ட வசதிகள்

ஹில் ஹோல்டு, ஹில் டிசென்ட் கன்ட்ரோல், 6 இஞ்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், டிவிடி பிளேயர், டயர் பிரஷர் மானிட்டர், பார்க்கிங் அசிஸ்ட், ரெயின் சென்சிங் வைப்பர்கள் ஆகியவை பிடுங்கப்பட்டுள்ளன. டிவிடி பிளேயருக்கு பதில் 2 டின் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும்.

இதுவும் இருக்காது...

இதுவும் இருக்காது...

பனி விளக்குகள், இரட்டை நுனி கொண்ட புகை போக்கி குழாய், ரூஃப் ரெயில்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவையும் இருக்காது.

ஸ்டீயரிங் கன்ட்ரோல் சுவிட்சுகள்

ஸ்டீயரிங் கன்ட்ரோல் சுவிட்சுகள்

ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் போன்ற வசதிகளும் பிடுங்கப்பட்டுள்ளன. பவர் விண்டோஸில் ஒரு தொடுதலில் தானாக கீழே இறங்கும் ஆட்டோ டவுன் வசதியும் மிஸ்ஸிங்.

 குரூஸ் கன்ட்ரோல்

குரூஸ் கன்ட்ரோல்

குரூஸ் கன்ட்ரோல், வாய்ஸ் கமான்ட் வசதிகளும் புதிய வேரியண்ட்டில் இருக்காது. வளைவில் கார் திரும்பும்போது சாலையை தெளிவாக காட்டும் விதத்திலான அடாப்டிவ் ஹெட்லைட் வசதியும் இல்லை.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பல வசதிகள் நீக்கப்பட்டாலும், மஹிந்திரா எக்ஸ்யூவி 500யில் சில முக்கிய வசதிகள் இடம்பெற்றுள்ளன. புரொஜெக்டர் ஹெட்லைட், மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம், டிரைவர், கோ பாசஞ்சர் காற்றுப் பைகள், டிஸ்க் பிரேக்குகள், பின்புற வைப்பர், டிஃபாகர் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500வில் 140 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்புரிகிறது.ட

விலை

விலை

ரூ.10.5 லட்சம் விலையில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வேரியண்ட் டஸ்ட்டருக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 4, 2013, 15:29 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+