ஆல்ட்டோ 800 காருக்கு ஆப்ஷனலாக ஏர்பேக் - விபரம்
கடந்த ஜூன் மாதம் கூடுதல் வசதிகளுடன் ஆல்ட்டோ 800 விஎக்ஸ்ஐ வேரியண்ட்டை மாருதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
சென்ட்ரல் லாக்கிங், அனைத்து கதவுகளிலும் பவர் விண்டோஸ், ரியர் ஸ்பாய்லர், கதவுகளை மூடும்போது பாதுகாப்பு தரும் கதவுகளில் ரப்பர் இன்சுலேஷன், ஃபுல் வீல் கவர்கள் ஆகியவை கூடுதலாக விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் சேர்க்கப்பட்டன.

தவிர, 4 ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், இடது பக்க ரியர் வியூ மிரர் மற்றும் ஏர்பேக் ஆகியவை அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், ஆல்ட்டோ 800 விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் ஆப்ஷனலாக ஏர்பேக்கை வாங்கிக்கொள்ளும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்ட்டோ 800 காரின் விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் ஏர்பேக் தேவையெனில் கூடுதலாக ரூ.18,000ஐ செலுத்தினால் போதுமானது. சென்னையில் ரூ.3.93 லட்சம் ஆன்ரோடு விலையில் ஆல்ட்டோ 800 கார் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








