உலகின் நம்பர்-1 இடத்தை இழந்த மாருதி ஆல்ட்டோ
உலகின் நம்பர்-1 இடத்திலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது இந்தியர்களின் மனம் கவர்ந்த மாருதி ஆல்ட்டோ. தற்போது நம்பர்-1 இடத்தை ஃபோக்ஸ்வேகன் கோல் பிடித்துள்ளது.
இந்தியாவில் நீண்ட காலமாக விற்பனையில் நம்பர்-1 ஆக இருந்து வரும் மாருதி ஆல்ட்டோ சர்வதேச மார்க்கெட்டிலும் முன்னிலை வகிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனையில் நம்பர்-1 இடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் டீசல் கார்களின் மீது வாடிக்கையாளர் கவனம் திரும்பியதால் ஆல்ட்டோவின் விற்பனையில் சரிவு ஏற்பட்டது.
இதன் எதிரொலியாக சர்வதேச மார்க்கெட்டில் முதலிடத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது ஆல்ட்டோ. கடந்த ஆண்டு இந்தியாவில் 2,86,833 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 8 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டது.
அதேவேளை, பிரேசில் மார்க்கெட்டில் 2,93,293 ஃபோக்ஸ்வேகன் கோல் கார்கள் விற்பனையாகியது. இதனால், ஆல்ட்டோவை பின்னுக்குத் தள்ளி ஃபோக்ஸ்வேகன் கோல் முதலிடத்தை பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தில் ஃபியட் யுனோ கார் இருக்கிறது. கடந்து ஆண்டு 2,55,838 யுனோ கார்களை ஃபியட் விற்பனை செய்துள்ளது.
ஆல்ட்டோவின் போட்டியாளர்களை ஸ்லைடரில் காணலாம்.

முதலிடத்தில் ஃபோக்ஸ்வேகன் கோல்

முதலிடத்தில் ஃபோக்ஸ்வேகன் கோல்

இரண்டாம் இடத்தில் ஆல்ட்டோ

இரண்டாம் இடத்தில் ஆல்ட்டோ

மூன்றாம் இடத்தில் ஃபியட் யுனோ



Click it and Unblock the Notifications








