ஸ்விப்ட் டீசல் உடனடி டெலிவிரி, ரிட்ஸ் டீசலுக்கு ரூ.45,000 தள்ளுபடி!

By Saravana
Maruti Swift
விற்பனையை அதிகரிக்கவும், போட்டியாளர்களை சமாளிக்கவும், ஸ்விப்ட் டீசல் காரை உடனடி டெலிவிரி கொடுப்பதாக மாருதி அறிவித்துள்ளது.

கார் மார்க்கெட் படுமந்தமாக இருந்து வருகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் கார் விற்பனை 7 சதவீதம் சரிவு கண்டிருக்கிறது. மேலும், பெட்ரோல் கார் விற்பனையில் பலத்த அடி விழுந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதியின் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சரிவை தவிர்த்து கார் விற்பனையை அதிகரிக்க மாருதி அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

பல மாதங்கள் தவம் கிடந்து வாங்கும் நிலை இருந்து வந்த ஸ்விப்ட் காரை தற்போது முன்பதிவு செய்தவுடன் டெலிவிரி கொடுப்பதாக தெரிவித்துள்ளது. ஸ்விப்ட்டுக்கு போட்டி அதிகரித்துள்ளதும் இந்த அறிவிப்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, ரிட்ஸ் டீசல் காருக்கு ரூ.45,000 தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனால், ரிட்ஸ் டீசல் காரின் பேஸ் வேரியண்ட் தற்போது ரூ.4.97 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

இதேபோன்று, ரிட்ஸ் பெட்ரோல் காருக்கு ரூ.25,000 தள்ளுபடி வழங்குவதாகவும் மாருதி தெரிவித்துள்ளது. வரும் 17ந் தேதி வரை காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த முன்பதிவு சலுகையை பெற்றுக்கொள்ளலாம் என மாருதி தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 15, 2013, 11:01 [IST]
English summary
Country's largest car maker Maruti Suzuki, just couple of days back had suspended petrol car production, due to poor demand. Now, the carmaker seems to face the heat in Diesel cars too and has come up with unique offers on its second best selling car, Swift and that too diesel variant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+