நவம்பரில் மாருதி கார் விற்பனையில் சரிவு - ஒரு பார்வை

By Saravana

கடந்த மாதம் மாருதியின் கார் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் 1,03,200 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 92,140 கார்களை மட்டுமே விற்பனை செய்தது.

கடந்த ஆண்டு நவம்பரில் உள்நாட்டு மார்க்கெட்டில் 90,882 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி கடந்த மாதம் 85,510 கார்களை விற்பனை செய்துள்ளது. இதனால், உள்நாட்டு மார்க்கெட்டில் 5 சதவீத விற்பனை சரிவை சந்தித்தது. மாருதியின் எந்தெந்த ரகத்தில் எவ்வளவு கார்கள் விற்பனையாகியுள்ளது என்ற விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

சிறிய ஹேட்ச்பேக் கார்கள்

சிறிய ஹேட்ச்பேக் கார்கள்

மாருதி 800, ஆல்ட்டோ, ஏ ஸ்டார், வேகன் ஆர் உள்ளடக்கிய ரகத்தில் 36,679 கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. இது 3.7 சதவீத உயர்வாகும்.

நடுத்தர ஹேட்ச்பேக் ரகம்

நடுத்தர ஹேட்ச்பேக் ரகம்

இதேபோன்று, ஸ்விஃப்ட், எஸ்டீலோ, ரிட்ஸ் உள்ளடக்கிய ரகத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் 23,849 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி கடந்த மாதம் 18,122 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த ரகத்தில் மட்டும் விற்பனை 24 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

டிசையர்

டிசையர்

டிசையர் செடான் காரின் விற்பனை 13.2 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 13,502 கார்களை விற்பனையாகிருந்த நிலையில், கடந்த மாதம் 15,286 கார்களை விற்பனை அதிகரித்துள்ளது.

 எஸ்எக்ஸ்4

எஸ்எக்ஸ்4

கடந்த மாதம் 200 எஸ்எக்ஸ்4 கார்களையும், ஒரே ஒரு கிசாஷி காரையும் மாருதி விற்பனை செய்தது. கடந்த ஆண்டு நவம்பரில் 692 எக்ஸ்எக்ஸ்4 கார்களை மாருதி விற்பனை செய்திருந்தது.

ஓம்னி

ஓம்னி

கடந்த மாதம் 8,650 ஓம்னி, ஈக்கோ உள்ளடக்கிய மினி வேன்களை மாருதி விற்பனை செய்தது. இந்த ரகத்திலும் விற்பனை 7.3 சதவீதம் குறைந்தது.

எர்டிகாவும் மந்தம்

எர்டிகாவும் மந்தம்

எர்டிகா, விட்டாரா, ஜிப்ஸி அடங்கிய யுட்டிலிடிட் ரகத்தில் 5,840 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த செக்மென்ட்டில் விற்பனை 21.5 சதவீதம் சரிவடைந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, December 2, 2013, 13:21 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+