விற்பனை மந்தம்: இருப்பை குறைக்க உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு?

கடந்த சில மாதங்களாக கார் விற்பனை தொடர்ந்து சுணக்கமாகவே இருந்து வருகிறது. இதனால், முன்னணி நிறுவனங்கள் கார்களுக்கு தள்ளுபடி சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர முற்பட்டு வருகின்றன.
ஆனால், இதற்கெல்லாம் போதிய பலன் கிடைக்கவில்லை. நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதியும் சலுகைகளை கொடுத்து வருகிறது. இருப்பினும், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாமல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இதனால், தற்போது யார்டுகளிலும், டீலர்களிலும் கார் இருப்பு அதிகரித்துள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக ஒரு நாள் உற்பத்தியை நிறுத்துவதற்கு மாருதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மாருதி இதுகுறித்து தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications







