மவுசு குறைந்த டீசல் கார்கள்... புதிய டீசல் எஞ்சின் ஆலை திட்டத்தை ஒத்தி வைத்த மாருதி!
டீசல் கார்களுக்கான மவுசு குறைந்து வருவதையடுத்து, புதிய டீசல் எஞ்சின் ஆலை திட்டத்தை ஒத்திப் போட்டுள்ளது மாருதி.
பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்ததையடுத்து, டீசல் கார்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் முனைப்பு காட்டினர்.

இதனால், டீசல் கார் விற்பனை கணிசமாக உயர்ந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு துவக்கம் முதல் டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
இதனால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் இடையிலான விலை வித்தியாசம் கணிசமாக குறைந்துவிட்டது. இதையடுத்து, டீசல் கார் விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் 51 சதவீதமாக இருந்த டீசல் கார்களின் பங்களிப்பு நடப்பாண்டின் இதே காலக்கட்டத்தில் 41 சதவீதமாக குறைந்துவிட்டது.
குர்கானில் உள்ள டீசல் எஞ்சின் ஆலையின் இரண்டாவது கட்டமாக விரிவாக்க மாருதி முடிவு செய்திருந்தது. ரூ.1,700 கோடி முதலீட்டில் இந்த திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், டீசல் கார் விற்பனை குறைந்ததையடுத்து, விரிவாக்கத் திட்டத்தை ஒத்திப் போட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஃபியட் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்பத்தை பெற்று தற்போது 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்களை மாருதி உற்பத்தி செய்து வருகிறது. மேலும், சொந்தமாக டீசல் எஞ்சின்களை தயாரிக்கவும் அந்த நிறுவனம் நடவடிகக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








