உத்தரகாண்ட் மீட்பு பணிகளுக்கு 5 ஆம்புலன்ஸ் வழங்கும் மாருதி!

உத்தரகாண்டில் சமீபத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. மேலும், 10,000 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
70,000 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சைக்கு உதவும் வகையில் 5 ஆம்புலன்ஸ்களை மாருதி வழங்க உள்ளது.
மேலும், மாருதி தொழிலாளர்களின் ஒருநாள் ஊதியமான ரூ.1.56 கோடி பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது. அங்கு புனரமைப்பு பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என மாருதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோன்று, மஹிந்திரா நிறுவனம் வெள்ள பாதிப்புகளுக்கு உதவும் வகையில், உத்தரகாண்ட் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








