புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் மாருதியின் காம்பெக்ட் எஸ்யூவி!
புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் மாருதியின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
800சிசி முதல் 1,600சிசி வரையிலான திறன் கொண்ட புதிய டீசல் எஞ்சின்களை சுஸுகி நிறுவனம் தற்போது உருவாக்கி வருகிறது. இந்த எஞ்சின்கள் மாருதி கார்களில் பொருத்தி அறிமுகம் செய்யப்பட உள்ளன.

மினி டிரக்
மாருதி அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மினி டிரக்கில் 800சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட உள்ளது.

வேகன் ஆர்
புதிய ஏ ஸ்டார் மற்றும் வேகன்-ஆர் கார்களிலும் இந்த எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. இதன்மூலம், கிராண்ட் ஐ10, செவர்லே பீட் உள்ளிட்ட கார்களுக்கு கடும் போட்டி ஏற்படும்.

வரிச்சலுகை
சுஸுகி நிறுவனம் தயாரிக்கும் புதிய டீசல் எஞ்சின்களில் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினும் ஒன்று. ஆனால், இந்தியாவில் வரிச்சலுகை நிபந்தனைக்காக இந்த எஞ்சினை 1.5 லிட்டர் எஞ்சினாக மாற்றுவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது.

காம்பெக்ட் எஸ்யூவி
புதிய காம்பெக்ட் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை மாருதி பொருத்த இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. தற்போது எர்டிகா வரையில் 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சினையே மாருதி பயன்படுத்துகிறது.

அறிமுகம்
1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட புதிய காம்பெக்ட் எஸ்யூவி 2016ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக மாருதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








