நாளை முதல் மாருதி கார் விலை ரூ.20,000 வரை உயர்கிறது

ரூபாய் மதிப்பில் நிலவும் ஏற்ற இறக்கமான நிலையால் மாருதி வருவாயில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் அந்த நிறுவனத்துக்கு ரூ.227.45 கோடி அளவுக்கு நிகர லாபத்தில் இழப்பு ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ.350 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.
வருவாயில் ஏற்பட்டு வரும் தொடர் இழப்பை சரிகட்டுவதற்காக கார் விலையை உயர்த்துவதாக மாருதி அறிவித்துள்ளது. மாருதி 800 முதல் கிசாஷி வரை அனைத்து மாடல்களின் விலை அதிகபட்சமாக ரூ.20,000 வரை உயர்கிறது. நாளை முதல் இந்த விலை உயர்வு டீலர்களில் அமலுக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








