விரைவில் சிஎன்ஜி ஸ்டிங்ரேவை அறிமுகப்படுத்தும் மாருதிொ
அடுத்த ஒரு சில மாதங்களில் சிஎன்ஜியில் இயங்கும் ஸ்டிங்ரே காரை விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஸ்டிங்ரே தோற்றத்தில் சிறப்பானதாக இருக்கிறது. ஆனால், வேகன் - ஆர் காருக்கும் இதற்கும் முகப்பு மற்றும் இன்டிரியரில் சில மாற்றங்களை தவிர பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை.
எஞ்சின், சஸ்பென்ஷன், பிரேக் அமைப்பு, மைலேஜ் என அனைத்தும் ஒன்றுதான். ஆனால், ஸ்டைலான ஹேட்ச்பேக் காரை விரும்பும் மாருதி வாடிக்கயாளர்கள் ஸ்டிங்ரேவை நிச்சயம் விரும்புவர். வேகன் ஆர் காரைவிட ரூ.50,000 வரை கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சிஎன்ஜியில் இயங்கும் ஸ்டிங்ரேவை மாருதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

கூடுதல் விலை
இப்போது ஸ்டிங்ரேவின் எல்எக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.4.09 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதைவிட ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையிலான கூடுதல் விலையில் சிஎன்ஜி ஸ்டிங்ரே வரலாம்.

சாதகம்
சிஎன்ஜியில் இயங்கும் ஸ்டிங்ரே மைலேஜ் அதிகம் தரும் என்பதால், வாடிக்கையாளர்களை கவரும் வாய்ப்பு உள்ளது. ஆனால், சிஎன்ஜி ஸ்டிங்ரே வந்தால் விற்பனையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூற இயலாது.

எல்பிஜி மாடல்
எல்பிஜியில் இயங்கும் ஸ்டிங்ரே அறிமுகம் செய்யப்பட்டால், அதிக வரவேற்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் எல்பிஜி கிடைக்கிறது. ஆனால், குறிப்பிட்ட சில நகரங்களில் சிஎன்ஜி கிடைக்கிறது.

டீசல் மாடல்
அடுத்த ஆண்டு துவக்கத்தில் 800சிசி டீசல் எஞ்சினுடன் ஸ்டிங்ரே விற்பனைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. டீசல் மாடலில் ஸ்டிங்ரே வந்தால் நிச்சயம் ஓரளவு நல்ல வரவேற்பை பெறும்.

வேகன் ஆருக்கு பாதிப்பு
ஸ்டிங்ரே வரவு பிற நிறுவனங்களின் கார்களின் விற்பனையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பில்லை. வேகன் ஆர் விற்பனையில்தான் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் நிலை இருக்கிறது.


Click it and Unblock the Notifications








