விரைவில் மேம்படுத்தப்பட்ட ஆல்ட்டோ கே10 அறிமுகம்

கடந்த 2010ல் மாருதி ஆல்ட்டோ கே10 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதுவரை இந்த காரில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், முதன்முறையாக ஆல்ட்டோ கே10 கார் புதுப்பொலிவு பெறுகிறது.
வெளிப்புறத்தில் சிறிது மாற்றங்களுடன் பீயேஜ் இன்டிரியர், புதிய அப்ஹோல்ஸ்டரி, புதிய வசதிகள் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றுடன் வர இருக்கிறது.
எஞ்சினில் எந்த மாற்றங்களும் இருக்காது. தற்போது பொருத்தப்பட்டிருக்கும் 67 பிஎச்பி சக்தியை அளிக்க வல்ல 998சிசி கேபி சீரிஸ் எஞ்சினுடன் வரும்.
தீபாவளி பண்டிகையையொட்டி இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








