விரைவில் மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் அறிமுகம்!
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட், டிசையர் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. மாருதியின் அதிகம் விற்பனையாகும் இந்த மாடல்கள் வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட், டிசையர் கார்களில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் வசதிகள், மற்றும் இதர விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்
தோற்றத்தில் அதிக மாற்றங்கள் இருக்காது. அதேவேளை, முன்பக்க கிரில், பம்பர் ஆகியவற்றில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கும். டியூவல் டோன் டேஷ்போர்டு, 16 இஞ்ச் அலாய் வீல்கள், பகல் நேர ரன்னிங் விளக்குகள் ஆகியவையும் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கும்.

வசதிகள்
லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதோடு, க்ரூஸ் கன்ட்ரோல் வசதியும் இருக்கும்.

ஸ்டார்ட்/ஸ்டாப்
மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் காரில் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற வழிவகுக்கும் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் அறிமுகமாகும் மாடலில் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. 2017ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்விஃப்ட், டிசையர் கார்களில் இந்த தொழில்நுட்பம் வரும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த உறுதியான தகவல் இப்போது இல்லை.

டாப் வேரியண்ட்
இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்டிஐ ஆகிய டாப் வேரியண்ட்டில் இந்த புதிய வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கும். இதர வேரியண்ட்டுகளில் தற்போது இருக்கும் வசதிகளை தொடர மாருதி முடிவு செய்துள்ளதாம்.

விலை
கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டிருப்பதால், இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்டிஐ ஆகிய வேரியண்ட்டுகள் விலை ரூ,50,000 வரை கூடுதலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








