அடுத்த வாரம் மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே ரிலீஸ்?
வரும் 20ந் தேதி மாருதியின் புதிய வேகன் ஆர் ஸ்டிங்ரே கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் காரை விடை தோற்றத்திலும், வசதிகளிலும் சற்று கூடுதல் அம்சங்களுடன் இந்த புதிய ஸ்டிங்ரே கார் வர இருக்கிறது.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 வருகையை சமாளிக்கும் விதத்தில், அந்த காரின் அறிமுகத்திற்கு முன்னதாக இந்த காரை விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன்மூலம், ஹூண்டாய் ஐ10 காருக்கு கிடைக்கும் அதிகப்படியான முன்பதிவை ஓரளவு குறைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த காரை மாருதி களமிறக்குகிரது.
மேலும், மாருதி ஸ்டிங்ரே காரின் டெஸ்ட் டிரைவ் மாடல்கள் டீலர்ஷிப்புக்கு வந்துவிட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அடுத்த வாரம் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதி என நம்பலாம்.

ஏமாற்றம்
முன்புறம் கவர்ச்சியும், கம்பீரமும் கலந்து நிற்கிறது. ஆனால், ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஸ்டிங்ரே காரின் பின்புற டிசைன் புதிது. பார்க்கவும் கவர்ச்சியாக இருக்கிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்டிங்ரேவின் பின்புற டிசைன் தற்போது விற்பனையில் இருக்கும் வேகன் ஆர் காரை ஒத்ததாகவே இருக்கிறது. இது பெரும் குறையாக தெரிகிறது.

எஞ்சின்
வேகன்-ஆர் ஸ்டிங்ரே காரிலும் 3 சிலிண்டர் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடனே வரும். இந்த எஞ்சின் 67 பிஎச்பி ஆற்றலையும், 90 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். இதுதவிர, எல்பிஜி, சிஎன்ஜி மாடல்களிலும் வரலாம்.

இன்டிரியர்
இந்த காரின் இன்டிரியர் பிரிமியமாக இருக்கும் என்பதோடு, கருப்பு நிறத்திலான இருக்கைகளுடன் வரும் என தெரிகிறது.

சிவிடி டிரான்ஸ்மிஷன்?
விலை பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களை ஒட்டிவிடும் என்பதற்காக சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

விலை
தற்போதைய வேகன் ஆர் காரைவிட ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை கூடுதலான விலையில் புதிய பிரிமியம் வேகன் ஆர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








