முதலில் மினி டிரக்கில் 800சிசி டீசல் எஞ்சினை பொருத்தும் மாருதி!!
மாருதி தயாரித்து வரும் புதிய 800சிசி டீசல் எஞ்சின் முதலாவதாக மினி டிரக்கில் பொருத்தி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மாருதி நிறுவனம் விரைவில் மினி டிரக் மார்க்கெட்டிலும் கால் பதிக்க உள்ளது. மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி கேரி என்ற பெயரில் மினி டிரக்கை இந்தோனேஷி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.

இந்த மினி டிரக்கை இந்திய மார்க்கெட்டுக்கு தகுந்தவாறு மாற்றி அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. ஒய்9டி என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய மினி டிரக் தயாராகி வருகிறது.
இந்த நிலையில், இந்த தனது முதல் டீசல் எஞ்சினை முதலாவதாக மினி டிரக்கில் பொருத்த மாருதி முடிவு செய்துள்ளதாம். இந்த புதிய எஞ்சின் 2 சிலிண்டர் கொண்டதாக இருக்கும்.
இதைத்தொடர்ந்து, ஒய்எல்7 என்ற பெயரில் தயாராகி வரும் புதிய ஏ ஸ்டார் காரிலும் பொருத்தப்பட உள்ளது. ஆனால், புதிய ஏ ஸ்டார் காரில் பொருத்தப்பட இருக்கும் எஞ்சின் 3 சிலிண்டர்களை கொண்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








