2016க்குள் 3 புதிய எஸ்யூவி மாடல்களை களமிறக்கும் மாருதி

வரும் 2016ம் ஆண்டிற்குள் 3 புத்தம் புதிய எஸ்யூவி மாடல்களை மார்க்கெட்டில் நிலைநிறத்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டி அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் சிறிய கார் மார்க்கெட்டை மட்டும் நம்பி வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து கொண்டுள்ளது மாருதி.

இதையடுத்து, அனைத்து பிரிவுகளிலும் சிறந்த கார் மாடல்களை நிலைநிறுத்து தனது மார்க்கெட் பங்களிப்பையும், நம்பர்-1 இடத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளை தீவிரமாக்கியுள்ளது. குறிப்பாக, படு வேகமாக வளர்ந்து வரும் எஸ்யூவி கார் மார்க்கெட் மீது மாருதி கண் வைத்துள்ளது. மிகப்பெரிய திட்டத்துடன் அந்த மார்க்கெட்டில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளவுள்ளது. இதற்காக, மாருதி அறிமுகம் செய்வதற்கு வாய்ப்புள்ள 3 எஸ்யூவி மாடல்கள் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 மாருதி எஸ் கிராஸ்

மாருதி எஸ் கிராஸ்

சர்வதேச அளவில் இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் எஸ்யூவி மாடல் இது. தற்போது விற்பனையில் இருக்கும் எஸ்எக்ஸ்4 கிராஸ்ஓவருக்கு மாற்று மாடலாக அறிமுகம் செய்யப்படுகிறது. ஒய்ஏடி என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்டது. இது 4.6 மீட்டர் நீளம் கொண்டது. அதாவது, டஸ்ட்டரைவிட அதிக நீளம் கொண்டது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

எஸ்எக்ஸ்4 கிராஸ்ஓவர் எஸ்யூவி 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் ஃபியட்டின் மல்டிஜெட் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதே எஞ்சின் ஆப்ஷனுடன் எஸ் கிராஸ் எஸ்யூவியும் வருகிறது. பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தியாவுக்கு...

இந்தியாவுக்கு...

அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2015ம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.

எக்ஸ்ஏ ஆல்ஃபா

எக்ஸ்ஏ ஆல்ஃபா

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கான்செப்ட் நிலை மினி எஸ்யூவி இது. இதன் உற்பத்தி நிலை மாடல் ஜிம்னி என்ற பெயரில் சர்வதேச மார்க்கெட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுஸுகி மற்றும் மாருதி நிறுவனங்களின் மினி எஸ்யூவி மாடலாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும். டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட்டின் மார்க்கெட்டை உடைக்கும் வல்லமை கொண்டதாக கருதப்படுகிறது.

அறிமுகம்....

அறிமுகம்....

அடுத்த ஆண்டு இந்த புதிய மினி எஸ்யூவியின் உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிமியம் மாடல்

பிரிமியம் மாடல்

மூன்றாவது எஸ்யூவி மாடல் தற்போது விற்பனையில் இருக்கும் கிராண்ட் விட்டாராவுக்கு மாற்று மாடலாக இருக்கும். ஆனால், விட்டாராவைவிட குறைவான விலையில் இந்த எஸ்யூவி வரும் என்று கூறப்படுகிறது.

புதிய டீசல் எஞ்சின்

புதிய டீசல் எஞ்சின்

கிராண்ட் விட்டார மற்றும் எக்ஸ்ஏ ஆல்ஃபா ஆகிய எஸ்யூவி மாடல்களில் சுஸுகி தற்போது உருவாக்கி வரும் புதிய டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

விற்பனை

விற்பனை

இந்த எஸ்யூவி 2015ம் ஆண்டு இறுதியில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 11, 2013, 10:40 [IST]
English summary
Country's largest car maker Maruti suzuki is planning to launch 3 new suv models in India by 2016.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+