வேகன்- ஆர், ஸ்விஃப்ட் இடையில் புதிய கார்: மாருதி களமிறக்குகிறது

அடுத்த மாதம் கிராண்ட் ஐ10 என்ற புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
பெட்ரோல் மற்றும் புதிய 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இந்த கார் விற்பனைக்கு வருவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் வருகை மாருதியின் ஸ்விஃப்ட் காருக்கு பெரும் நெருக்கடியை தர இருக்கிறது.
கிராண்ட் ஐ10 காரின் வருகையால் ஏற்படும் நெருக்கடியை முறியடிக்கும் வகையில் புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை மாருதி களமிறக்க உள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வேகன்- ஆர் மற்றும் ஸ்விஃப்ட் கார்களுக்கு இடையில் இந்த புதிய கார் நிலைநிறுத்தப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








