ரூ.4 லட்சத்திற்குள் புத்தம் புதிய காரை களமிறக்கும் மாருதி

ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சத்திற்குள் மேலும் ஒரு புதிய கார் மாடலை மாருதி அறிமுகப்படுத்துகிறது.
சிறிய கார் மார்க்கெட்டில் அதிக மாடல்களை மாருதி விற்பனை செய்து வருகிறது. ஆனால், ஏ-ஸ்டார் மற்றும் எஸ்டீலோ கார்கள் விற்பனையில் பின் தங்கி இருக்கின்றன.
இந்த நிலையில், ஏ-ஸ்டார் மற்றும் எஸ்டீலோ கார்களுக்கு இடையில் புத்தம் புதிய கார் மாடலை மாருதி அறிமுகப்படுத்த உள்ளது. ஏ-ஸ்டார் தற்போது ஏற்றுமதி மாடலாக இருப்பதால், எஸ்டீலோவுக்கு மாற்றாக இந்த புதிய மாடல் வரலாம் என தெரிகிறது.
முதலில் பெட்ரோல் மாடலில் மட்டும் இந்த புதிய காரை மாருதி அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கடுத்து, தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் புதிய 800 சிசி டீசல் எஞ்சினுடன் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட புதிய ஏ-ஸ்டார் காரை அறிமுகப்படுத்திய பின்னர் இந்த புதிய கார் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








