மாருதி ஸ்விஃப்ட், டிசையர், எர்டிகா கார்களுக்கு மெகா தள்ளுபடி!
கார் மார்க்கெட் நிலைமை தொடர்ந்து மோசமாகவே இருந்து வருவதால், தள்ளுபடி தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. இதனால், பல முன்னணி மாடல்களுக்கும் கணிசமான தள்ளுபடி கிடைக்கிறது.
இப்போது பல கார் மாடல்களுக்கு எக்ஸ்ஷோரூம் விலையில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை தள்ளுபடியை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதியும் விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்விஃப்ட், டிசையர், எர்டிகா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களுக்கு டீலர் அளவில் ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்விஃப்ட் ஆர்எஸ்
ஸ்விஃப்ட் ஆர்எஸ் ஸ்பெஷல் எடிசன் காருக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஸ்விஃப்ட் ஆர்எஸ் சிறப்பம்சங்கள்
ராலி ஸ்போர்ட் காரை போன்ற கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் கிடைக்கிறது. ரேஸ் கார்களில் அதிகம் பயன்படுத்தப்படும் நீலம் மற்றும் கருப்பு நிற பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள், கருப்பு நிற வீல் கவர், நீல நிற பின்புறத்துடன் ரியர் வியூ மிரர், டோர் சில் மற்றும் கதவுகளில் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ், நீலம் மற்றும் கருப்பு வண்ண கலவையில் லெதர் அப்ஹோல்ஸ்டரியுடன் இன்டிரியர், உயர்ரக சிடி பிளேயர் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இருக்கின்றன. விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.

மாருதி டிசையர் ரீகல் எடிசன்
மாருதி டிசையர் ரீகல் எடிசன் காருக்கு ரூ.40,000 வரை சில டீலர்களில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்
பெட்ரோல் மாடலின் விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் மட்டும் கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் கிடைக்கிறது. பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், குரோம் பூசப்பட்ட முன்பக்க கிரில், ரியர் பார்க்கிங் சென்சார், புதிய மியூசிக் சிஸ்டம், லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், லெதர் அப்ஹோல்ஸ்டரி, மிதியடிகள், ரீகல் பேட்ஜ் ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. நீல வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.

மாருதி எர்டிகா ஃபெலிஸ்
விற்பனை படு மந்தமாகி வருவதால் எர்டிகா ஸ்பெஷல் எடிசனான ஃபெலிஸ் வேரியண்ட்டுக்கு ரூ.38,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்
பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், ரியர் ஸ்பாய்லர், சீட் பாக்கெட், ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் பொறிக்கப்பட்ட சீட் கவர், சில்வர் கலர் முகப்பு கிரில், சில்வர் நிற ரியூர் வியூ கண்ணாடி, ஸ்டீயரிங் வீல் கவர், மிதியடிகள், டோர் சில் கார்டு, தலையணைகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், பனி விளக்குகள் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இடம் பெற்றிருக்கும். விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ வேரியண்ட்டுகளில் மட்டுமே ஸ்பெஷல் எடிசன் ஆக்சஸெரீஸ்கள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








