போனியாகவில்லை... எஸ்டீலோ உற்பத்தியை நிறுத்திய மாருதி?

படு மோசமான விற்பனையை பதிவு செய்து மாருதியின் தயாரிப்பு என்று வெளியில் சொல்ல அருகதையில்லாமல் தவிக்கும் எஸ்டீலோ ஹேட்ச்பேக் கார் விரைவில் மார்க்கெட்டிலிருந்து விடை பெற உள்ளது.

இதே ரகத்தில் மாருதி விற்பனை செய்து வரும் வேகன் ஆர் மாதத்திற்கு 10,000ஐ தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், இந்த கார் சராசரியாக 650 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. மேலும், இந்த விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான அறிகுறியும் தெரியவில்லை. எனவே இந்த காரின் உற்பத்தியை மாருதி நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸென் இடம் போச்சு

ஸென் இடம் போச்சு

வெற்றிகரமாக மாடலாக இருந்த ஸென் காருக்கு மாற்றாக இந்த கார் டால் பாய் டிசைனில் வந்தது. 2007ம் ஆண்டு முதல் விற்பனையில் இருக்கும் எஸ்டீலோ பத்தோடு பதினொன்றாக நின்றதே தவிர மாருதிக்கு கைகொடுக்கவில்லை. மேலும், ஸென் இடத்தை தற்போது வெற்றிடமாக்கி விட்டு செல்கிறது.

டிஸ்கவுன்ட்

டிஸ்கவுன்ட்

உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள எஸ்டீலோவுக்கு இருப்பை தீர்த்துக் கட்டும் விதமாக மாருதி டீலர்களில் ரூ.35,000 முதல் ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

 அடுத்த குறி...

அடுத்த குறி...

ஏ ஸ்டாரும் விற்பனை எண்ணிக்கையை வெளியில் சொல்ல முடியாதவாறு தவித்து வருகிறது. எனவே, எஸ்டீலோவையடுத்து ஏ ஸ்டாருக்கும் மாருதி விடை கொடுக்க உள்ளது.

மாற்று மாடல்

மாற்று மாடல்

ஏ ஸ்டார் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், அந்த இடம் வெற்றிடமாகாது. இந்த காருக்கு மாற்றாக அடுத்த தலைமுறை ஏ ஸ்டார் காரை மாருதி அறிமுகம் செய்ய உள்ளது.

டீசல் நம்பிக்கை

டீசல் நம்பிக்கை

ஏ ஸ்டாருக்கு மாற்றாக வரும் புதிய மாடல் டீசல் மாடலிலும் வருகிறது என்பதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 23, 2013, 14:56 [IST]
English summary
The production of Maruti Estilo might be stopped due to poor sales. Read more about Maruti Estilo in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+