ஆப்பை பிடுங்கிய நிசான்... ஏ ஸ்டார் உற்பத்தியை நிறுத்திய மாருதி!

By Saravana

விற்பனையில் சோபிக்காத மாடல்களுக்கு மாருதி கல்தா கொடுத்து வருகிறது. அந்த லிஸ்ட்டில் தற்போது இடம் பெற்றிருப்பது ஏ ஸ்டார்.

பெயரில் ஏ ஸ்டாராக இருந்தாலும் விற்பனையிலும் இசட் ஸ்டாராக கூட இல்லை. எனவே, எஸ்டீலோவை தொடர்ந்து அடுத்த ப்ளாப் மாடலான ஏ ஸ்டார் உற்பத்தியையும் மாருதி விரைவில் நிறுத்துகிறது.

ஏற்றுமதி மாடல்

ஏற்றுமதி மாடல்

நம் நாட்டில் ஏ ஸ்டார் விற்பனை எப்போதும் சிறப்பாக இருக்கவில்லை. ஆனால், இதுதான் மாருதியின் முக்கிய ஏற்றுமதி மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியாவிலிருந்து மாருதி ஏற்றுமதி செய்யும் ஏ ஸ்டார் கார் பல வெளிநாடுகளில் பிக்ஸோ என்ற பெயரிலும், ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் நிசான் நிறுவனம் பிக்ஸோ என்ற பெயரிலும் விற்பனை செய்து வருகிறது.

உற்பத்தி

உற்பத்தி

உள்நாட்டு மார்க்கெட்டில் சராசரியாக மாதம் 500 ஏ -ஸ்டார் கார்களே விற்பனையாகி வந்தது. ஆனால், இந்த காரின் ஏற்றுமதி காரணமாகவே மாருதிக்கு பொருளாதார ரீதியில் பயன் கிடைத்து வந்தது. கடந்த மாதம் மொத்தம் 7,171 ஏ ஸ்டார் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில், 6,500 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

ஐரோப்பிய மார்க்கெட்டுக்காக ஏ ஸ்டார் இறக்குமதியை நிசான் நிறுத்தியுள்ளதால், தற்போது அந்த காருக்கு முழுக்குப் போட வேண்டிய கட்டாயத்திற்கு மாருதி தள்ளப்பட்டுள்ளது.

மற்றொரு காரணம்

மற்றொரு காரணம்

புதிய தலைமுறை ஏ ஸ்டார் காரை ஒய்எல் - 7 என்ற குறியீட்டு பெயரில் மாருதி வடிவமைத்து சோதனைகள் நடத்தி வருகிறது. இதற்காகவே, தற்போதைய ஏ ஸ்டார் உற்பத்தியை மாருதி நிறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

புதிய ஏ ஸ்டார்

புதிய ஏ ஸ்டார்

வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை ஏ ஸ்டார் காரை மாருதி அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ ஸ்டார் ப்ளாப் மாடலானதற்கு அதன் டிசைனும் முக்கிய காரணம். இந்த டிசைனில் இருந்த குறைகளை களைந்து புதிய ஏ ஸ்டாரை மாருதி வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. தவிரவும், டீசல் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 22, 2013, 15:32 [IST]
English summary
Following the discontinuation of the Maruti Estilo the automaker is reportedly planning to stop production of another of its flop model, the A-Star.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+