கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் ஸ்பெஷல் ஆல்ட்டோ கே10 அறிமுகம்
பண்டிகை காலத்தையொட்டி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக புதிய ஸ்பெஷல் எடிசன் ஆல்ட்டோ கே10 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மியூசிக் எடிசன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த காரில் தள்ளுபடி விலையில் கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
புளுடூத், எம்பி3 வசதியுடன் கூடிய ஜேவிசி ஸ்டீரியோ பிளேயர், 4 இஞ்ச் முன்பக்க ஸ்பீக்கர்கள், மியூசிக் எடிசனை குறிக்கும் வகையில் பாடி கிராபிக்ஸ் ஸ்டிக்கர்கள், அதில் Musik என்ற ஆங்கில எழுத்துக்களும் இடம்பெற்றிக்கிறது. ஸ்பெஷல் சீட் கவர் மற்றும் ஸ்டீயரிங் வீல் கவர், மெல்லிய ஒளி உமிழும் ஆம்பியன்ட் விளக்குகள், ரியர் ஸ்பாய்லர், மட் பிளாப்புகள் மற்றும் மிதியடிகளுடன் கிடைக்கும்.

ஆல்ட்டோ கே10 காரின் எல்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ கார்களில் இந்த புதிய ஸ்பெஷல் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.17,516 மதிப்புக்கு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ஆக்சஸெரீஸ்களை ரூ.12,419 என்ற தள்ளுபடி விலையில் வழங்குவதாக மாருதி தெரிவித்துள்ளது.
மாருதி ஆல்ட்டோ கே10 காரில் 3 சிலிண்டர் 1.0 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 67 பிஎஸ் பவரையும், 90 என்எம் டார்க்கையும் அளிக்கும். லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








