டிசம்பரில் மாருதி கார் விற்பனை 3% அதிகரிப்பு

2011 டிசம்பரில் 92, 161 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி கடந்த மாதம் 95,145 கார்களை விற்பனை செய்துள்ளது. இதனால், 3 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது மாருதி.
கடந்த மாதம் உள்நாட்டில் 82,073 கார்களை மாருதி விற்பனை செய்து 6 சதவீத வளர்ச்சியை எட்டியது. அதேவேளை, ஏற்றுமதி 12 சதவீதம் சரிந்தது.
இந்த நிலையில், மாருதியின் விற்பனையில் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் ஆல்ட்டோ, ஆல்ட்டோ 800, வேகன்-ஆர் உள்ளிட்ட சிறிய கார் மார்க்கெட்டில்விற்பனை 15 சதவீதம் சரிவு கண்டிருப்பது அந்த நிறுவனத்துக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
சலுகைகள் வழங்கியும் சிறிய கார்களின் விற்பனை கைகொடுக்கவில்லை. டிசையர் விற்பனை 42 சதவீதம் உயர்ந்ததும், எர்டிகா விற்பனையும் மாருதியை மொத்த விற்பனை சரியாமல் கைகொடுத்தன.
சிறிய கார்களின் விற்பனையை மீண்டும் உயர்த்துவதற்கு டீசல் மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்தும் பணிகளை மாருதி தீவிரப்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








