மாருதியின் புதிய நிர்வாக இயக்குனராக அயுக்கவா நியமனம்

மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ.,வாக சின்ஷோ நகனிஷி இருந்து வருகிறார். சட்டத்தில் பட்டம் பெற்ற நகனிஷி கடந்த 1971ம் ஆண்டு சுஸுகி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
2003ம் ஆண்டு சுஸுகியில் நிர்வாக இயக்குனர் பதவியில் அமர்ந்த அவர் 2007ம் ஆண்டு மாருதி சுஸுகியின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். இந்த நிலையில், இந்த மாதத்துடன் நகனிஷி ஓய்வு பெறுகிறார்.
இதைத்தொடர்ந்து, ஏப்ரல் முதல் மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக கெனிகி அயுக்கவா பொறுப்பேற்க உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தான் சுஸுகியின் கெனிகி அயுகவா தலமை வகித்தவர்.
இந்த நிலையில், கார் மார்க்கெட் படு மந்தமாக இருந்து வரும் இந்த இக்கட்டான நிலையில், மாருதி நிறுவனத்தை நிர்வகிக்கும் மிகப் பெரும் பொறுப்பை ஏற்க உள்ளார் கெனிகி அயுக்கவா.


Click it and Unblock the Notifications








