ஜூலையில் மாருதி கார் விற்பனை சிறிது உயர்வு
கடந்த மாதம் மாருதியின் கார் விற்பனை சிறிதளவு உயர்ந்தது. கடந்த சில மாதங்களாக உள்நாட்டு விற்பனை சரிவை பதிவு செய்த நிலையில், கடந்த மாதம் 5.8 சதவீதம் விற்பனை உத்வேகம் பெற்று அந்த நிறுவனத்துக்கு சற்று உற்சாகத்தை தந்தது.
ஆனால், அந்த உற்சாகத்தை கொண்டாட காட்டிக் கொள்ள முடியாத அளவுக்கு ஏற்றுமதியில் 27.3 சதவீதம் சரிவு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜூலையில் 11,210 கார்களை ஏற்றுமதி செய்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 8,154 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.

உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரையில், மாருதி 800, ஆல்ட்டோ, ஏ ஸ்டார், வேகன் ஆர் கார்களை உள்ளடக்கிய செக்மென்ட்டில் மொத்தம் 33,587 கார்களை விற்பனை செய்து 15.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஸ்விப்ட், எஸ்டீலோ, ரிட்ஸ் கார்களை உள்ளடக்கிய காம்பெக்ட் கார் செக்மென்ட்டில் 13,882 கார்களை விற்பனையாகி வளர்ச்சி 11.9 சதவீதம் குறைந்துவிட்டது. டிசையர் உள்ள சூப்பர் காம்பெக்ட் ரகத்தில் 15,249 கார்கள் விற்பனையாகி 33.6 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
எக்ஸ்எக்ஸ்-4 கார் மற்றும் ஜிப்ஸி, கிராண்ட் விட்டாரா, எர்டிகா உள்ளிட்ட யுட்டிலிட்டி ரக கார் விற்பனையும் அந்த நிறுவனத்துக்கு கைகொடுக்கவில்லை. இந்த ரகத்தில் மொத்தமே 4,562 கார்களை மட்டுமே மாருதி விற்பனை செய்துள்ளது.
ஓம்னி, ஈக்கோ ஆகியவை உள்ளடக்கிய செக்மென்ட்டில் 7,543 கார்கள் விற்பனையாகி 9.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 82,234 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 83,299 கார்களை விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








