வாடிக்கையாளர் சேவையில் 14வது ஆண்டாக மாருதி முதலிடம்!

By Saravana

தரமான சேவை மூலம் வாடிக்கையாளர்களின் திருப்தியை பெறுவதில் மாருதி கார் நிறுவனம் முன்னிலை வகிப்பதாக ஜேடி பவர் ஆசிய பசிபிக் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் வாங்கியவுடன் முதல் 12 மாதங்களிலிருந்து 24 மாதங்கள் வரை அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வு

ஆய்வு

சர்வீஸ் தரம், சர்வீஸுக்கு வாகனத்தை பிக்கப் அப் செய்வது, சர்வீஸ் பற்றிய அறிவுறை, சர்வீஸ் மையத்தின் வசதிகள் மற்றும் சர்வீஸ் செய்ததில் திருப்தி என 5 பிரிவுகளின் கீழ் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அசவுகரியம்

அசவுகரியம்

நம் நாட்டில் சர்வீஸ் மையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தபோதிலும், வாடிக்கையாளர்கள் சர்வீஸ் மையத்தை விரைவாக சென்றடைய நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இருந்த அதே நிலைதான் தற்போது இந்த விஷயத்தில் இருந்து வருவதாகவும் ஜேடி பவர் ஆய்வு கூறுகிறது. வீட்டிலிருந்து சர்வீஸ் மையத்தை எட்டுவதற்கு சராசரியாக அரை மணி நேரம் என்ற அளவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அமைவிடம்

அமைவிடம்

இதுதவிர, சர்வீஸ் மையத்தின் அமைவிடமும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் இடத்தில் அமையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாருதி முதலிடம்

மாருதி முதலிடம்

இந்தியாவில் 13 கார் தயாரிப்பாளர்களுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 1000 புள்ளிகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டது. இதில், 876 புள்ளிகளை பெற்று மாருதி நிறுவனம் முதலிடத்தை பெற்றது. ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட 5 பிரிவுகளில் சர்வீஸ் தரத்தில் மாருதிக்கு 43 சதவீதத்தினர் திருப்தி தெரிவித்தனர்.

ஹூண்டாய்

ஹூண்டாய்

இந்த ஆய்வில் 833 புள்ளிகளுடன் ஹூண்டாய் இரண்டாவது இடத்தையும், 825 புள்ளிகளுடன் ஹோண்டா மூன்றாவது இடத்தையும் பிடித்தன. மஹிந்திரா, டொயோட்டா, டாடா, ரெனோ, செவர்லே, நிசான், ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஃபோர்டு, ஃபியட் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.

More from DriveSpark

Article Published On: Thursday, November 7, 2013, 16:16 [IST]
English summary
Maruti Suzuki has been ranked as the best in customer satisfaction with dealer service in India for the 14th consecutive year as per JD Power Asia Pacific study titled "2013 India Customer Service Index (CSI) Study".
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+