இலங்கையில் புதிய கார் ஆலை அமைக்க மாருதி திட்டம்!

இலங்கையில் புதிய கார் ஆலை அமைப்பதற்கான சாத்திக்கூறுகளை மாருதி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

இந்தியாவை தவிர்த்து சர்வதேச அளவில் வர்த்தகத்தை விரிவாக்குவதற்கான முயற்சிகளை மாருதி மேற்கொண்டுள்ளது. இதன் முதல் படியாக இலங்கையில் புதிய கார் அசெம்பிளிங் ஆலையை அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

Maruti Car

இத்திட்டம் பலனளிக்குமா என்பது குறித்து பல்வேறு அம்சங்கள் குறித்து தற்போது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், வரி மற்றும் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவும் உள்ளது. ஆனால், இந்த தகவல்கள் குறித்து மாருதியிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதனிடையே, மாருதி நிறுவனத்தில் பங்கு மூலதனத்தை அதிகரிக்க சுஸுகி முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா மறுத்துள்ளார். மேலும், ஊரகப் பகுதிகளில் வர்த்தகத்தை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

மொத்த விற்பனையில் 30 சதவீத பங்களிப்பு ஊரகப் பகுதிகளில் இருந்து கிடைப்பதாகவும், எனவே ஊரகப் பகுதிகளில் சேவை மையங்களின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Friday, December 27, 2013, 10:28 [IST]
English summary
Maruti Suzuki, the market leader when it comes to low cost mass manufactured small cars, is reportedly looking to expand its clout beyond India. According to media reports, the automaker is planning to set up an assembly plant in Sri Lanka.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+