நடிகர் மாதவன் பெயரில் ஸ்பெஷல் எடிசன் வேகன்- ஆர் அறிமுகம்!

By Saravana

டால் பாய் கான்செப்ட்டில் மாருதிக்கு வெற்றியை தேடித் தந்த வேகன் ஆர் விற்பனையில் நல்ல பங்களிப்பை தொடர்ந்து அளித்து வருகிறது. இந்த நிலையில், ஸ்டிங்ரே வரவால் மாருதி வேகன் ஆரின் விற்பனையில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதனை தவிர்த்துக் கொள்ளும் விதமாக புதிய ஸ்பெஷல் எடிசன் வேகன் ஆர் காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது. விளம்பர தூதராக இருந்து வரும் நடிகர் மாதவன் பெயரில் சிக்னேச்சர் எடிசனாக இந்த கார் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மாதவன் கையெழுத்து

மாதவன் கையெழுத்து

காரின் பக்கவாட்டிலும், பின்புறத்தில் நடிகர் மாதவன் கையெழுத்து பொறிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று, புதிய நீல நிற பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களும் இந்த வேகன் ஆர் காரை வேறுபடுத்தும்.

கூடுதல் ஆக்சஸெரீஸ்

கூடுதல் ஆக்சஸெரீஸ்

2 டின் கென்வுட் ஆடியோ சிஸ்டம், மாதவன் கையெழுத்து பொறிக்கப்பட்ட லெதர் கவர்கள், டிஜிட்டல் திரையுடன் கூடிய ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் பின்புறத்தில் கூரையில் ஸ்பாய்லரும் பொருத்தப்பட்டுள்ளது. புதிய வேகன் ஆர் காரில் வேகன் ஆர் என்ற ஆங்கிலத்திலான பிராண்டு பெயர் பொறிக்கப்பட்ட சில் பிளேட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

வட்டியிலும் சலுகை

வட்டியிலும் சலுகை

கடன் திட்டத்தில் வாங்குவோருக்கு வட்டியில் 0.5 சதவீதம் குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கிப்ட் வவுச்சர்

கிப்ட் வவுச்சர்

ரூ.5,100 மதிப்புடைய கிஃப்ட் வவுச்சரும் ஒவ்வொரு காருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு ஜாஸ்தி?

எவ்வளவு ஜாஸ்தி?

இந்த காருக்கு ரூ.32,000 மதிப்பிலான ஆக்சஸெரீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், காரின் விலையுடன் ரூ.20,000 மட்டுமே கூடுதலாக செலுத்தினால் போதுமானது என மாருதி தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 16, 2013, 11:36 [IST]
English summary
Following the launch of the Stingray Maruti has decided to divert some of its attention to the Wagon R to keep buyer attention on the old tall boy. Out of that thought has come Wagon R Madhavan Signature Edition. The bollywood actor is the brand ambassador (remember the TV ads featuring Madhavan?).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+